Hail The Dark skinned Cowherd boy
கருத்த நிற மாடு மேய்க்கும் சிறுவனை போற்றுவோம் ka Penance under the tree brings out the Divinity in fullest form " கானக் குயில் குரலில் கருத் அமைந்திடினும் உன் கான குழலோசை மயக்குதே கருத்த குழலோடு நிறத்த மயிலிற கிறுக்கி அமைத்த திறத்திலே கான மயிலாடும் மோன குயில் பாடும் நீல நதியோடும் வனத்திலே" ( Please listen to the song here https://www.youtube.com/watch?v=Zh43DFtbFhs ) யார் அந்த கிருஷ்ணன் ??? கருத்த தோல் நிறத்திற்காக மனிதர்களால் பழிக்கப்பட்டு மிருகங்களால் மிகவும் நேசிக்கப்பட்ட ஓர் உன்னத பேராற்றல் அந்த உன்னத அன்பின் வடிவத்தை உணர நீல நிறத்தில் நதியோடும் கானகத்தில் கானங்கள் இசைக்கும் மூங்கில் மரங்களும் அதில் துளையிடும் வண்டினங்களும் கிளையில் அமரந்து பரமானந்தத்தில் லயிக்கும் பறவைகளும் ஊர்வனவும் திரிவனவும் துள்ளி குதித்து மகிழும் நிகழ்வே கிருஷ்ணன் என்கிறார் கவிதைகள் ஊற்றெடுக்கும் காட்டின் வேங்கட கவி. ( ஊத்துக்காடு வேங்கட சுப்பய்யர் ) மலையை சுண்டு விரலில் தூக்கி மலைகளை வணங்கினால் இயற்கை என்னும் இறைமையை உணர முடியும் என்று உணர்த்தவே " பச்சை மாமலை போல் மேனி " என்று ம...