இளைய ராஜா மாணிக்க வாசகருக்கு எவ்வளவு ராயல்டி கொடுத்தார் ? How Much Royalty did Ilayaraja pay to Manikka Vasagar ??
இளைய ராஜா மாணிக்கவாசகருக்கு எவ்வளவு ராயல்டி கொடுத்தார் ? How Much Royalty did Ilayaraja pay to Manikka Vasagar ?? ப ண்ணைபுரத்து பண் இசைப்பவரே பாட்டுக்கு பட்டா கேட்பது ஏனோ?? " அ ப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும் தான் பொறக்க முடியுமா?" பாடிய நீயே பாட்டின் தந்தையான பாடலாசிரியரை மறைக்கலாமோ?? " ப ள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்" என உனது அருகில் இருந்து தேடியவனை மறக்க மனம் கூடுதில்லையே " தி ருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று உருகி மருகி சிம்பொனி அமைத்த நீர் அந்த மாணிக்க வாசகருக்கு கொடுத்த ராயல்டி தான் என்ன?? " நா ன் யார்?" என்று தன்னை தொலைத்தவனை அருணையின் அடியில் கருணையின் வடிவில் நிதம் தொழும் நீயே கோவணம் வரை துறந்ததால் மணக்கின்றான் ரமணன் என்று நம்ப மறப்பதேன் "நாயகனின்" நாயகனே ப ட்டை பட்டையாய் வைரமும் கொண்டு வந்து கூடவே பனை ஓலையில் ஒரு பாட்டு " காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" படித்தவுடன் பட்டென்று பட்டாக்களை போட்டு விட்டு செங்கரும்...