Posts

Showing posts from January, 2022

Sound Light Delight in Abundance - Vallalar

Image
ஒளியும் ஒளியும் குகைதான் உடலோ !!! ஊனுடம்பே ஆலயம் என்பதன் மூலமோ !! மறையும் மறையும் ஓதும் உணர்வோ !!! ஓலியாத மனமும் ஒளியாத தவமும் ஈர்க்கும் குணமோ !!! ஓலிதான் குகமோ ஒளிதான் சிவமோ !!! ஓலியும் ஒளியும் இணைந்தால் மழையோ !!! அருளும் மழைதான் ஆனந்த ஜீவகாருண்யமோ !!! வாடும் பயிரை வாடாமல் காக்கும் இயற்கையின் ஒழுங்கோ !!! அடங்கா ஒளியை அடைக்கதான் வெண்துணியோ !!!! வள்ளலே விரிந்தபின் அடக்கும் கடையும் கொள்வதும் எளிதோ ???? தையில் பொங்கலோ ஒளியின் பொங்கலோ பூசத்தில் பூஜிக்கின்றேன் அருட்பெருஞ்  ஜோதியே !!!   வள்ளல் ஜோதி இராமலிங்க சுவாமிகள் எந்த ஒரு கூட்டிற்குள்ளும் அடைக்க முடியாத எல்லையற்ற ஒளி உருவமாக உலகத்தில் ஒளியின் சாத்தியத்தை உலகத்தவருக்கு உணர்த்திய நாள் தை பூசம். அவர் ஒரு வெள்ளைதுணி கொண்டு தன் தலை வரை முக்காடிட்டு அந்த ஒளி உடலை மறைத்து இந்த உலகில் பிறந்த பிறக்கப் போகின்ற அனைத்து உயிர்களுக்கும் பிரபஞ்சத்தின் ஒளித்தன்மையை உணர வெளிப்படுத்த வாய்ப்புள்ளது அதற்கான வழியையும் வள்ளலார் அனைவருக்கும் வழங்கியு...

MGR 105

Image
  மதன கோபால இராமசந்திரன் எம்ஜிஆரை பார்த்த பின்னே எம்மூஞ்சியாரு பார்ப்பார் ??? வந்தது கலக்கம் பிறந்தது கலகம் பிரிந்தது கழகம்   ஆரூரில் பிறந்தது தட்சணை அணைத்த மூர்த்தி எழும்பூர் வரை நீண்ட இருப்பு பாதையின் கீர்த்தி கூவம் அங்கே நாறுது பார் நிதி பல வேண்டி   வாரி வாரி வழங்கியவர் வள்ளலாரு வாழும் போதே வள்ளல் என்றவர் வாரியாரு வந்தவர்கெல்லாம் ஊட்டுவாரு சோறு வறுமை என்றதுமே இராமாபுரத்தை (தில்) அடைவாரு ( அடை ஆறு) கருமை என்றதுமே கோபால(னின்) புறத்தை தானே நினைப்பாரு பெற்றால் தான் பிள்ளையா ? பெறாமலே பெற்றதை போல் வளர்த்தாரு பெற்றதற்காகவே வாழ்வோர் மத்தியிலே பெறாதவருக்கும் பெற்றதை தந்தாரு அம்மூவையும் ஆளாக்கியவர் அம்”முகா”வையும்   அரசேற்றியவர் அதிமுகாவையும் அரங்கேற்றியவர் காலம் மட்டும் பொறுத்திருந்தால் கிண்டியும் கண்டியை தொட்டிருக்கும் என்றைக்கும் இராமசந்திரன் என்றாலே இலங்கைகும் குளிரெடுக்கும். 17 ஜனவரி 2022