Posts

Showing posts from May, 2022

களக்காடு கிருஷ்ணனை பாடுவோம்

Image
  களைமிகு காட்டானை புலிமிகு காட்டாறை குழல் கொண்டு ஊதும் மேய்ப்பானை வெண்ணைமிகு மண்பானை உண்டும் தவழ்வானை வானம் பொழிவானை வணங்கும் தமிழ் மண்ணே இந்த எழில்மிகு திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் அடர்ந்த காடுகள் புலிகளின் வாழ்விடத்தால் புகழ்பெற்ற களக்காடு மலைதொடரின் அடிவாரத்தில் இருக்கும் களக்காடு என்னும் சிற்றூரில் கையில் வெண்ணையுடன் யாதுமறியா பாலகன் யாதுமாகி நிற்கின்றான் அந்த யதுகுல திலகம். மிக சமீபத்தில் அவன் எங்களை எந்த முன்னறிவிப்புமின்றி பகல் ஒரு மணியளவில் களக்காட்டிற்கு வரும்படி  செய்துவிட்டான். நண்பகலில் கோவில் திறந்திருக்குமா ? கண்ணனை காண முடியுமா ? குறைந்தபட்சம் கோவில் மண்ணையாவது வணங்கிவிட்டு வருவோம் என்று தலமிறங்கினோம்.  கதவிடுக்கு மூலமாக அவன் திருக்கோலம் கண்டு மகிழ்ந்தோம். அந்த மாயாவி அத்துடன் விடாமல் நாங்கள் கோவிலில் நின்று கொண்டிருப்பதை திரு. SRS மணியன் அவர்களுக்கு காட்டிக் கொடுத்தான் அந்த மாயச் கறுத்த சிறுவன்.  திரு. மணியன், எங்கள் முன்னோர்கள் இந்த புண்ணிய தலத்தில் பிறந்து வளர்ந்த விவரம் எங்களிடமிருந்து அறிந்த பின் எங்களை கோவிலுக்குள் வருமாறு ...