இரமணாயனம் - பாலும் பழமும்
தன்னைத் தேடி அலைந்து, தான் உணர்ந்ததை, அவனே சிவன், சிவனே அவன் என்று, சவம் சிவமாகும் வித்தையை சமர்ப்பிக்க, அசலமாய் நிற்கும் அருணனிடம் அடைக்கலமானார். சத்தங்கள் சாதிக்காததை, மௌன மொழியால் கற்பித்தார். கல்லையும் முள்ளையும் கழியின் துணையோடு, கடந்தார் கௌபீனன்! ஆடை நிறைந்தவனின் ஆசை, உள்ளத்தில் நிறைந்து ஓசையுடன் ஓலமிட்டது. காஞ்சியில் தஞ்சம், பாண்டிக்கு ஒரு படையெடுப்பு! அருணியைத் தேடி அலைந்தது ஓர் அருணி! அருணையின் அடிவாரத்தில், அருணி நிகழ்ந்தது! கண்ணோடு கண்கள் நோக்க, கண்மணிகள் ஆட மறுக்க அசலமானது, அனைத்துமே! விஞ்ஞானம் தாண்டிய மெய்ஞானம் விளங்கியது! *பால்* எனும் பாலகன், *கேள்* எனும் சொல் மறந்தான் *கேள்வியை வேள்வியாக்கு* என வேலையாள் வேகப்படுத்தினான்! கேட்பவன் உண்டு பதிலும் உண்டு ஆனால் கேள்விகள் எங்கே! மனதின் மயக்க வயலில், ஒரு மூச்சு முழுதாய் மேய்ந்தது! ஆடை இல்லாதவர், ஆடை அணிந்தவருக்கு, தன் அருளால் புத்தாடை அணிவித்தார்! சந்தித்த சாதுக்களின் உறவால் சாதித்த ...