நானும் கவிஞன் தான் I am also a Poet
நா.முத்துக்குமார் பாடல்களை தொ. கா. வில் பலர் வகை தொகையில்லாமல் பாடிக் கொண்டிருந்ததை பார்த்தேன் கேட்டேன் நாமும் குமார் தானே பாட போகலாமா தமிழை நான் பாட வேண்டாமா என்று தயங்கினேன் நம் பெயரில் "முத்து"இல்லையே என்று மயங்கினேன் " முத்து குளிக்க வாரீகளா மூச்சை அடக்க வாரீகளா " "முத்தை"யாவின்** பாடல் வரிகள் வரவேற்றது முத்தெடுக்க தூத்துக்குடி "தான்" போக வேண்டுமா ? எட்டய புரத்தில் தான் பிறக்க வேண்டுமா ? யுக பாரதி உண்டு பழனி பாரதி உண்டு யுகத்துக்கே ஒரு பாரதி தான் உண்டு எவரேனும் சொல்லிடுவர் என்ற அச்சமுண்டு இன்று கடையேனும் கவிதை எழுத வழி உண்டோ ? என்றே மலைத்தேன் கடையத்து காரிகையை கரம் பிடித்து அக்னி வலம் வந்து அகத்து காரி ஆக்கியவன் கரம் பிடித்து கவிதை வயலில் உழ சொல்லி தருவானோ தமிழ்பதத்தை திருநெல்வேலிகாரன் என்று தமிழ் அல்வா கிண்ட விடுவானோ தமிழ் வரவில்லை என்றால் அருவா தீட்டி வருவானோ வாஞ்சி மணியாச்சி வந்ததும் சுட்டு சாம்பலாக்கி விடுவானோ திருவல்லிக்கேணியில் நீ பிறந்ததால் நான் இறந்தேன் என்று யானையால்...