Maa Kaali bengali
3rd May 2021 - Indian States Assembly election Results declared
மே 3 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கபட்டபோது
நாக காந்திமதி
மொடக்குறிச்சியில்
மொடக்குறிச்சியில்
ஆனால்
ஆயிரம் விளக்குகள்
எறியவில்லை
முருகனை தாராபுரம்
அண்ணாமலை அடி வாரிய
அரவக்குறிச்சி இனி
அறிவுக்குறைச்சி தான்
உதய சூரியனின் வெப்பம் யாருக்கும் சுடலையா??

இடைபாடியுள் மாணிக்கமே
இடுப்புடைய துவைக்கும்
இயந்திரத்தின்
பொத்தானை அழுத்த மறந்ததேனோ
கருங்காலி பலர்
குடை விரித்தாலும்
பெண்காளி முன்
கால் தூக்கி
தோடு அணிய முடியாமல்
போனதேன் காசி விசுவநாதனே
தங்க கட்டிகள்
கண்டும் சபரிமலை
சீண்டும் விஜயனை
மோதி ஜெயிக்க
மலையாளம் படிக்க
மறந்ததாலா ??
காற்றினில் கரோனா
களத்தினில் வீரனா
அசோமில் சோனாவால்
பிடித்து மீண்டாயே
துவாரகையின் கறுத்த சிறுவன்
கோவர்த்தன
கிரி தூக்கி
காட்டிய வழிதனில்
அண்ணாமலையை
வலம் வந்து
மலையெங்கும் மரம்
வளர்த்தால்
அறம் வளரும்
கங்கையும் யமுனையும்
பொங்கும்
பார் எங்கும்
பசுமை சிறக்கும்
நோய் இறக்கும்
வானமும் வசப்படும்.

Superb 👍
ReplyDelete