MGR 105
மதன கோபால இராமசந்திரன்
எம்ஜிஆரை பார்த்த பின்னே
எம்மூஞ்சியாரு
பார்ப்பார் ???
வந்தது கலக்கம்
பிறந்தது
கலகம்
பிரிந்தது
கழகம்
ஆரூரில் பிறந்தது
தட்சணை அணைத்த
மூர்த்தி
எழும்பூர்
வரை நீண்ட
இருப்பு
பாதையின்
கீர்த்தி
கூவம் அங்கே
நாறுது பார்
நிதி பல வேண்டி
வாரி வாரி
வழங்கியவர்
வள்ளலாரு
வாழும் போதே
வள்ளல் என்றவர்
வாரியாரு
வந்தவர்கெல்லாம்
ஊட்டுவாரு
சோறு
வறுமை என்றதுமே
இராமாபுரத்தை (தில்)
அடைவாரு
( அடை ஆறு)
கருமை என்றதுமே
கோபால(னின்) புறத்தை
தானே நினைப்பாரு
பெற்றால்
தான் பிள்ளையா ?
பெறாமலே பெற்றதை
போல்
வளர்த்தாரு
பெற்றதற்காகவே
வாழ்வோர்
மத்தியிலே
பெறாதவருக்கும்
பெற்றதை
தந்தாரு
அம்மூவையும்
ஆளாக்கியவர்
அம்”முகா”வையும் அரசேற்றியவர்
அதிமுகாவையும்
அரங்கேற்றியவர்
காலம் மட்டும்
பொறுத்திருந்தால்
கிண்டியும்
கண்டியை தொட்டிருக்கும்
என்றைக்கும்
இராமசந்திரன் என்றாலே
இலங்கைகும்
குளிரெடுக்கும்.
Comments
Post a Comment