பாரதிராஜா வின் நினைவு அலைகள் ஓய்வதில்லை
உனக்கு
"முதல் மரியாதை" செய்ய
"சிகப்பு ரோஜாக்கள்"
எடுத்து கொண்டு
"கிழக்கே போகும் ரயில்"
ஏறி வந்தேன்
அந்த "கிழக்கு சீமையிலே"
ஒரு "புதுமை பெண்"
"மண் வாசனை" உடன்
"புது நெல் புது நாற்று"
கொண்டு "தாஜ் மகால்"
கட்ட கண்டேன்
அங்கே ஷாஜகான்
"ஒரு கைதியின் டைரி"யில்
"காதல் ஓவியம்" வரைந்து
தன் "நிழல்களில்"
"நிறம் மாறாத பூக்கள்"
இருப்பதை "புதிய
வார்ப்புகள்" ஆக கண்டான்
காற்றில் அவர் இன்று
" நாடோடி தென்றல்" ஆக
கலந்திருக்கலாம்
ஆனாலும் அவரின் நினைவு
"அலைகள் ஓய்வதில்லை"
எல்லாம் அந்த
" பதினாறு வயதினிலே"
அவர் ஏற்படுத்திய தாக்கம்
அவருக்காக
"கடலோரக் கவிதைகள்"
எழுதி விட்டான்
களக்காட்டு கவிராயன்
11.6.2026

Comments
Post a Comment