Seeker and the Seer
காஞ்சியில் கஞ்சி கரையேறிய வேட்டிகள் கரையில்லா காவி கொண்ட குடந்தை குளவிளக்கு கரைந்தும் போகுமோ என்றே அஞ்சும் அளவிற்கு வாயாடிகள் வலம் வந்து அரற்றிய அண்ணனின் தம்பிகளும் அஞ்சற்க என்று அரவணைக்க வந்தணன் தவமுனிவன் நச்சுபுகையாய் நாத்திகம் பரவ நஞ்சுண்ட நமச்சிவமாய் காமாட்சி அடி அமர்ந்து அருளாசி வழங்கினான் காசிற்காக விலை போன கடைக்காரன் விற்கவும் துணிந்தனன் நம் மரபை வெறும் கைக்குட்சிக்கெண்டு வறும் காலால் நடந்தே நாற்திசையும் நன்மையளித்தே திருத்தவே முடியாத கட்சியிலும் திருநீரிட்டு முத்தையாவை கண்ணனுக்கு தாசனாக்கி கவிதை கடல் விரித்தனன் நகரங்களிலெல்லாம் காஞ்சி நிலைமாறி உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் கூடா ( ர ) நடிப்பில் நிலைகுலைந்து நிற்க ஏகாம்பரமே குடையாய் கொண்டு ஏகம் அன்றி இரண்டில்லை என்ற சங்கரனின் வாக்கையே வாழ்ந்து காட்டினன் காமக் களியாட்டம் கட்சி வெறியாட்டம் நிதிக்கு முன்னிலை நீதிக்கு இழிநிலை தமிழகமே தறுதலை தருமத்திற்கு சோதனை தலைகுனிந்து துணிவிழந்து நினைவிழந்து போதையில் பேதையரும் தலைவிரிக்க ஊழலின் ஊழ்வினையால் உரமிழந்த தென...