Demon to Tree to Peacock
அசுரன் மரமானதால் மயிலாகினான் பாரதத்தில் பல தெய்வங்களின் திருவிளையாடல்கள் பற்றி பல புராணங்கள் விவரிக்கின்றன. அது தீபாவளி பண்டிகை என்றால் அதில் நரகாசுரன் என்ற அரக்கனை அவனை தாய் பூமா தேவியின் அவதாரமான சத்ய பாமா கொல்வதால் கொண்டாடப்படுவது என்றும் , விஜய தசமி என்றால் அதில் இராமன் இராவணனை கொன்றான் அல்லது துர்க்கை அரக்கனை கொன்றதால் கொண்டாடப்பட்ட ஒரு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஆனால் திருசெந்தூரில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி - இன்று ( 9 நவ 2021) சுக்ல பக்ஷ சஷ்டி ( அமாவாசை முடிந்ததில் இருந்து ஆறாவது நாள் ) ஒரு சிறப்பு அம்சத்தை கொண்டுள்ளது. காசியப முனிவரின் மகனான சூரபத்மன், தன் தவ வலிமையினால் அடைந்த தவ சித்துகளை பிற உயிர்களுக்கு தீங்கிழைக்க பயன்படுத்தியதால் அனைத்து உயிரினங்களும் முருக பெருமானிடம் வேண்டுகோள் விடுத்தன. அதன் பொருட்டு போர் களத்திற்கு வந்த முருகனை அசுர படைகள் பல விதங்களில் எதிர்கின்றன. அனைத்து அசுரர்களும் முருகனின் பேராற்றலால் மடிந்து போகிறார்கள். ஆனால் அரக்கர்களின் தலைவன் கடைசியாக போருக்கு வரும் போது தன் மாய சக்தியால் பல உருவங்களை எடுக்கிறார். போர் கடுமையாக ந...