மிக்ஜாம் புயலில் பாரதியார் Bharathi in Michaung Floods
ஏ ரிகளை கொள்ளை கொண்டு சே ரிகளில் கும்பலாக சேர்ந்து அ டாது சேர்த்த செல்வங்கள் அனைத்தும் வி டாது பெய்த மழையில் அடையாற்றின் அடை வெள்ளத்தில் அடித்து போகும் மெல்ல சென்னை கடல் சுழப் போகும் என்று பாரதி பாட வேண்டி வரும் என்றுணர்ந்து அல்லிகேணியில் அந்த ஆனை அந்த ஆணை தள்ளிவிட்டதோ மிக்ஜாமும் மிச்சம் இல்லாமல் முற்றம் வரும் என்று நாற்றம் மிகு நகரத்தில் நான் வாழமாட்டேன் என்று எட்டா புறத்திற்கு சென்று விட்டானோ மகாகவி 11.12.2023 வேள்சசேரியில் சிக்கிக் கொண்ட களக்காட்டு கவிராயர் கிருஷ்ணகுமார் சத்தியவாகீஸ்வரன்