mahasivaratri 2023 மகாசிவராத்திரி அருட்பெருஞ்ஜோதி 2023

 

தம் கைகள் 
தமக்கு உதவியென்று 
தம்பிகள் படிக்கவேயில்லை 
தமக்கைகள் வாழும் வரை 
தங்கைகள் படிக்கவில்லை 
தமயன்கள் காலம் வரை 

பாச மலர் என்று உருகுவோர்
பாச மிலர் என்று மருகுவோர்
பாச கயிறு வீசும் முன்னே 
பாச பதி பார்வதி பதி
பாடி பணி பாதி ராத்திரியில் 

இராப்பாடி அவன் 
இறாதபடி வாழும் ஜீவன் 
அவனே சிவன் 
அனைத்திலும் அவன் 

கூப்பாடு இடாதே அடி 
கூப்பிடு தூரத்தில் 
கும்பிடும் கரத்தில் 
குவியும் புருவ மத்தியில் 

அருட்பெருஞ்ஜோதி 
அணையா விளக்கு 
அசையும் உணர்வு 
வள்ளலாய் வாரி வழங்கிட 
காத்திருக்கிறது 
சிவராத்திரியில் 


க. க. கி. கு. 16.2.2023 

Comments

Post a Comment

Popular posts from this blog

GU RU Purnima - Dispelling Darkness to Light

A Pedestrian Paramacharya

Sindoor - door of sins பார் அதி புதுமை பெண்