காற்றில் ஜானகி Wind is full of Janaki
"சிங்கார வேலனே தேவா"
உன் " பூஜைக்கு வந்த மலரை "
பார்த்து " மலரே மௌனமா"
என்றவுடன் உன்னை
" நெஞ்சினிலே நெஞ்சினிலே"
வைத்து " செந்தூரபூவே செந்தூரபூவே" என்று பாடி
"மார்கழி திங்கள் அல்லவா"
என்று வள்ளி பாட
" வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்"
ஓடி வந்த வேலனை பார்த்து
" மச்சானை பாத்தீங்களா " என்று வள்ளி கேட்க, அவனோ " ஊரு சனம் தூங்கிருச்சு ஊத காத்த" என்று பாட அதற்கு எசப்பாட்டாக
"பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா" என்று வள்ளி பாட
"அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன்" என்று வேலன் தாளம் கூட்ட
" பூவரசன் பூ பூத்தாச்சு " என்று வள்ளி துள்ளினாள்
" சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா" வேலன் வள்ளியை சீண்டினான், அவளோ " சின்னஞ்சிறு கிளியே சித்திரை பூவிழியே " என்று தன்னை மறந்து வள்ளி பாட வேலன் வழக்கம் போல் காட்டில் மாயமானான். அவனை தேடிக் கொண்டே வள்ளி பாடுகிறாள்
"காற்றில் எந்தன் கீதம் காணாத உன்னை தேடுதே "
எண் ஜாண்
உடலிற்கு சிரசே
பிரதானம்
சிரசிலும் ஒன்
ஜாண் அகல
வாயே முந்தும்
அதிலும் ஒன்
ஜாண் நீள
நாக்கே ஆடும்
ஆனால் இந்த
ஜாண்( ஜானகி)
கிக்கு மட்டுமே
பாடும், ஆடும்,
கொஞ்சும்
சலங்கை
p.s. : இசை கலைஞர்கள் குறிப்பாக குரலிசை கலைஞர்கள் உள்ளத்தை ஊடுருவம் கலையில் விற்பன்னர்கள். 60 ஆண்டுகளாக 3 தலைமுறையை மனதால் ஒரு நிலைப்படுத்திய ஒரு உன்னத கலைஞரான திருமதி எஸ். ஜானகி அம்மாவின் உன்னத இசை சேவையை கொண்டாடுவோம். அவரும் இசை குயில் திருமதி பி சுசீலாவும் மும்பையில் பிறந்திருந்தால் அவர்கள் இருவருக்கும் " பாரத ரத்னா" என்றோ கிடைத்திருக்கும். அவர்களின் இசையை கொண்டாடும் அவரின் ரசிகர்களே அவர்களுக்கு கிடைத்த மாபெரும் அங்கிகாரம்.
களக்காட்டு கவிராயர்
Kalakaattu Kavirayar
13th July 2026


Arumai
ReplyDeleteThank you
Delete