காற்றில் ஜானகி Wind is full of Janaki

 


"சிங்கார வேலனே தேவா"

உன் " பூஜைக்கு வந்த மலரை "

பார்த்து " மலரே மௌனமா" 

என்றவுடன் உன்னை

" நெஞ்சினிலே  நெஞ்சினிலே"

வைத்து " செந்தூரபூவே  செந்தூரபூவே" என்று பாடி

"மார்கழி திங்கள் அல்லவா"

என்று வள்ளி பாட

" வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்" 

ஓடி வந்த வேலனை பார்த்து

" மச்சானை பாத்தீங்களா " என்று வள்ளி கேட்க, அவனோ " ஊரு சனம் தூங்கிருச்சு ஊத காத்த" என்று பாட அதற்கு எசப்பாட்டாக 

"பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா" என்று வள்ளி பாட

"அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன்" என்று வேலன் தாளம் கூட்ட 

" பூவரசன் பூ பூத்தாச்சு " என்று வள்ளி துள்ளினாள்

" சின்னஞ்சிறிய வண்ணப் பறவை  என்னத்தை சொல்லுதம்மா" வேலன் வள்ளியை சீண்டினான், அவளோ " சின்னஞ்சிறு கிளியே சித்திரை பூவிழியே " என்று தன்னை மறந்து வள்ளி பாட வேலன் வழக்கம் போல் காட்டில் மாயமானான். அவனை தேடிக் கொண்டே வள்ளி பாடுகிறாள்

"காற்றில் எந்தன் கீதம் காணாத உன்னை தேடுதே " 


எண் ஜாண்

உடலிற்கு சிரசே 

பிரதானம்

சிரசிலும் ஒன் 

ஜாண் அகல 

வாயே முந்தும்

அதிலும் ஒன் 

ஜாண் நீள 

நாக்கே ஆடும்

ஆனால் இந்த

ஜாண்( ஜானகி)

கிக்கு மட்டுமே

பாடும், ஆடும்,

கொஞ்சும்

சலங்கை



p.s. : இசை கலைஞர்கள் குறிப்பாக குரலிசை கலைஞர்கள் உள்ளத்தை ஊடுருவம் கலையில் விற்பன்னர்கள். 60 ஆண்டுகளாக 3 தலைமுறையை மனதால் ஒரு நிலைப்படுத்திய ஒரு உன்னத கலைஞரான திருமதி எஸ். ஜானகி அம்மாவின் உன்னத இசை சேவையை கொண்டாடுவோம். அவரும் இசை குயில் திருமதி பி சுசீலாவும் மும்பையில் பிறந்திருந்தால் அவர்கள் இருவருக்கும் " பாரத ரத்னா" என்றோ கிடைத்திருக்கும். அவர்களின் இசையை கொண்டாடும் அவரின் ரசிகர்களே அவர்களுக்கு கிடைத்த மாபெரும் அங்கிகாரம்.


களக்காட்டு கவிராயர்

Kalakaattu Kavirayar

13th July 2026


Comments

Post a Comment

Popular posts from this blog

பத்தின்பத்தில் கண்ணதாசன் 10 x 10 of Kanna Dasan

தாமதம் ஏன் கண்ணா ? Why the Delay krishna ?

சினிமாவில் குருகுலம் Cinema's Gurukul