Sound Light Delight in Abundance - Vallalar
ஒளியும் ஒளியும் குகைதான் உடலோ !!! ஊனுடம்பே ஆலயம் என்பதன் மூலமோ !! மறையும் மறையும் ஓதும் உணர்வோ !!! ஓலியாத மனமும் ஒளியாத தவமும் ஈர்க்கும் குணமோ !!! ஓலிதான் குகமோ ஒளிதான் சிவமோ !!! ஓலியும் ஒளியும் இணைந்தால் மழையோ !!! அருளும் மழைதான் ஆனந்த ஜீவகாருண்யமோ !!! வாடும் பயிரை வாடாமல் காக்கும் இயற்கையின் ஒழுங்கோ !!! அடங்கா ஒளியை அடைக்கதான் வெண்துணியோ !!!! வள்ளலே விரிந்தபின் அடக்கும் கடையும் கொள்வதும் எளிதோ ???? தையில் பொங்கலோ ஒளியின் பொங்கலோ பூசத்தில் பூஜிக்கின்றேன் அருட்பெருஞ் ஜோதியே !!! வள்ளல் ஜோதி இராமலிங்க சுவாமிகள் எந்த ஒரு கூட்டிற்குள்ளும் அடைக்க முடியாத எல்லையற்ற ஒளி உருவமாக உலகத்தில் ஒளியின் சாத்தியத்தை உலகத்தவருக்கு உணர்த்திய நாள் தை பூசம். அவர் ஒரு வெள்ளைதுணி கொண்டு தன் தலை வரை முக்காடிட்டு அந்த ஒளி உடலை மறைத்து இந்த உலகில் பிறந்த பிறக்கப் போகின்ற அனைத்து உயிர்களுக்கும் பிரபஞ்சத்தின் ஒளித்தன்மையை உணர வெளிப்படுத்த வாய்ப்புள்ளது அதற்கான வழியையும் வள்ளலார் அனைவருக்கும் வழங்கியு...