Posts

An English Ode to Kapil Dev

Image
  A Committed Sinner Par Excellence Everyone of His Delivery was an art of DEVIL ery His every Outswinger was India's mood swinger He appeared on ad of shaving cream every forest was shaven till we scream Every tree was cut for a willow Every street had a fellow who will stroke a unseen ball to sixer every teen became azharuddin every ghar had one tendulkar Every traffic policeman had a Prayer Let's play everyday a one dayer No road had traffic cricket fever became terrific That red cherry  was corona of 83 Streets were full of sons every dozen became an opposition Every moment in Sun were cherished as fun Sinner didnt lose his sight for everyone's delight threw his weight showed  I ndia's  C ash under the  L ight Till that day ( 25 June 1983) when Lloyd Marshalled his last gentlemen Till that Moment Vivian was Caught by that acumen Cricket was a Game played Under Lord('s) Sun still the Man with Toothful Grin Kapil Dev ka Jawab Nahin Oh Lord Kapil Dev ( Lord Siv...

mahasivaratri 2023 மகாசிவராத்திரி அருட்பெருஞ்ஜோதி 2023

Image
  தம் கைகள்  தமக்கு உதவியென்று  தம்பிகள் படிக்கவேயில்லை  தமக்கைகள் வாழும் வரை  தங்கைகள் படிக்கவில்லை  தமயன்கள் காலம் வரை  பாச மலர் என்று உருகுவோர் பாச மிலர் என்று மருகுவோர் பாச கயிறு வீசும் முன்னே  பாச பதி பார்வதி பதி பாடி பணி பாதி ராத்திரியில்  இராப்பாடி அவன்  இறாதபடி வாழும் ஜீவன்  அவனே சிவன்  அனைத்திலும் அவன்  கூப்பாடு இடாதே அடி  கூப்பிடு தூரத்தில்  கும்பிடும் கரத்தில்  குவியும் புருவ மத்தியில்  அருட்பெருஞ்ஜோதி  அணையா விளக்கு  அசையும் உணர்வு  வள்ளலாய் வாரி வழங்கிட  காத்திருக்கிறது  சிவராத்திரியில்  க. க. கி. கு. 16.2.2023  

Hail The Dark skinned Cowherd boy

Image
கருத்த நிற மாடு மேய்க்கும் சிறுவனை போற்றுவோம் ka Penance under the tree brings out the Divinity in fullest form " கானக் குயில் குரலில் கருத் அமைந்திடினும் உன் கான குழலோசை மயக்குதே கருத்த குழலோடு நிறத்த மயிலிற கிறுக்கி அமைத்த திறத்திலே கான மயிலாடும் மோன குயில் பாடும் நீல நதியோடும் வனத்திலே" ( Please listen to the song here  https://www.youtube.com/watch?v=Zh43DFtbFhs  ) யார் அந்த கிருஷ்ணன் ??? கருத்த தோல் நிறத்திற்காக மனிதர்களால் பழிக்கப்பட்டு மிருகங்களால் மிகவும் நேசிக்கப்பட்ட ஓர் உன்னத பேராற்றல் அந்த உன்னத அன்பின் வடிவத்தை உணர நீல நிறத்தில் நதியோடும் கானகத்தில் கானங்கள் இசைக்கும் மூங்கில் மரங்களும் அதில் துளையிடும் வண்டினங்களும் கிளையில் அமரந்து  பரமானந்தத்தில் லயிக்கும் பறவைகளும் ஊர்வனவும் திரிவனவும் துள்ளி குதித்து  மகிழும் நிகழ்வே கிருஷ்ணன்  என்கிறார் கவிதைகள் ஊற்றெடுக்கும் காட்டின் வேங்கட கவி. ( ஊத்துக்காடு வேங்கட சுப்பய்யர் ) மலையை சுண்டு விரலில் தூக்கி மலைகளை வணங்கினால் இயற்கை என்னும் இறைமையை உணர முடியும் என்று உணர்த்தவே " பச்சை மாமலை போல் மேனி " என்று ம...

Kannadasan 95

Image
  கண்ணதாசன் 95 செந்தமிழ் தேன் மொழியால் பாட்டும் நீயே பாவமும் நீயே பாடிய உன்னையே பாட வந்தேனே !!!   விசுவின் இசையும் தேவனின் (மகா ) மெட்டும் மனதில் பதியும் உன் துள்ளல் பாட்டாலே   நச்சுண்ட ஈசனும் நடிக நாத்திகர் மத்தியிலே நடமாட வைத்தானே   ஓடும் ரயிலின் இருப்பு பாதையில் கழக போதையில் தலை வைக்க வைத்தானே   ஓடா ரயிலும் தண்டவாள தலையும் வண்டவாளம் அனைத்தையும் இசைப்பட சொன்னானே   பட்டினத்தாரையும் பகவத் கீதையும் பாமர இசையில் படம்பிடித்து சொன்னானே   நாட்டின் கோட்டையிலே நிதி சேர்க்கும் வேட்கையிலே அடுக்கு மொழி பேசிய அற்பர்கள் மத்தியிலே   நாட்டுக்கோட்டையிலே நல்லறத்தை காட்டிடவே பாட்டுக்கோட்டையிலே பிறவியை புட்டு வைத்தவனே   வைரத்திற்கும் முத்திற்கும் பட்டம் தேடும் தலையிருக்கும் சிறிஞர்கள் மத்தியிலே கிடைக்காத அறிய முத்தையா தமிழின் சொத்து அய்யா !!   உனக்கு பிறகு அனைத்தும் பணத்திற்கும் பதவிக்கும் பட்டத்திற்கும் பகட்டிற்கும் பாட்டு எழுதும் பல்லிளிக்கும் சொத்தைய...

The prince sat under a Tree

Image
  ராகம் : மதுவந்தி   ( கண்ட நாள் முதலாய் சாயலில் ) 1.   அரச மரத்தினடி அமர்ந்த அரசனடி  அடிமுடிகாணா அரிய ஜோதியை காண  (அரச மரத்தினடி ) 2. ஆ ல மரத்தினடி அமர்ந்த தென் திசை முனிவனடி சனகாதியருக்கு உரைக்காமல் உணர்த்திய  ( ஆல மரத்தினடி ) கல் ஆலமரத்தினடி குருவினடி 3. அ சுரனும் மாமரமாய் ஆனதினால் மலைக்குருவும் அவனை தன் சின்னமாய் ஏற்றானடி 4. அ ம்புகள் எய்து அனுதினம் கொன்றவனும் வன்னி மரத்தினடி அமர்ந்ததினால் வான்மீகி ஆனானடி   5. ம ரம் போல் விரிய மனமும் விழைய தான் மட்டும் வாழாமல் பல் உயிர் ஓம்பும் மரம் போல் வாழ (அரச மரத்தினடி )   6. அ ரண்மனை துறந்து காட்டிலே வாழ்ந்ததால் அரசனும் அவதாரம் ஆனான் மரவுரி தரித்ததால் மறை போற்றும் பெரும் ஆள் ஆனான் பெருமாள் ஆனான். (அரச மரத்தினடி ) களக்காட்டு கவிராயர் கிருஷ்ண குமார் விளக்கம் : 1. அரச குமாரன் சித்தார்த்தன் ஒரு அரச மரத்தடியில் தன் சந்தித்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு அதனை சிந்தித்து ஆழ்நிலை தியானத்தில் ஆழ்ந்த போது எளிதில் யாராலும் காண முடியாத அருட் பெருஞ் ஜோதியை தன் உள்ளில் கண்ட நொடி அவன் அந்த மரத்தின்...

இராமாயணம் பிறந்த இடம்

Image
                   இராமாயணம் பிறந்த இடம் 17.3.2020                                                           ராகம் : ஹிந்தோளம் வா ருங்கள் வான்மீகியூருக்கு வாருங்கள்  திரு வான்மீகியுருக்கு வாருங்கள் ஈ சனை காண வாருங்கள் மருந்தீசனை காண வாருங்கள் ஈசன் ஈசன் ஈசன் மருந்தீசன் ரா ம ராம ராம ராமா ராம ராம ராம ராமா என்றே சதா ஜபிக்கும் சதா சிவனை காண வாருங்கள்  3 ந ச்சுண்ட  ந மசிவாயனும் நா வினிக்க  ந வின்ற  நா மம்       4 (ராம ராம ராம ராமா ) ரா ம நாதத்தின் ரூபம் காணவே நாரதனை பணித்தனன் நாத சொரூபன் ரா மாயணம் படைக்க வேடனின் வேதனை  தணிக்க வன்னிகாட்டில்  தன்னை மறக்க மரா மரா என்று உருவேத்தினன் அயன் மகன்         2 பு றத்தீ கூட்டும் வன்னி அகத்தீ ஏற்றும் வன்னி அகத்தியரும் சிவமாய் கண்ட வன்னி வன்னி நீ மரமா மரமா மரமா ம ராம ரா ம என்னும் சத...