The prince sat under a Tree
ராகம் : மதுவந்தி ( கண்ட நாள் முதலாய் சாயலில் )
1. அரச மரத்தினடி
அமர்ந்த அரசனடி
2. ஆல மரத்தினடி
அமர்ந்த தென்
திசை முனிவனடி
சனகாதியருக்கு
உரைக்காமல்
உணர்த்திய ( ஆல மரத்தினடி )
கல் ஆலமரத்தினடி
குருவினடி
4. அம்புகள்
எய்து
அனுதினம்
கொன்றவனும்
வன்னி மரத்தினடி
அமர்ந்ததினால்
வான்மீகி
ஆனானடி
5. மரம் போல்
விரிய
மனமும் விழைய
தான் மட்டும்
வாழாமல்
பல் உயிர்
ஓம்பும்
மரம் போல்
வாழ (அரச மரத்தினடி )
6. அரண்மனை துறந்து
காட்டிலே
வாழ்ந்ததால்
அரசனும் அவதாரம்
ஆனான்
மரவுரி தரித்ததால்
மறை போற்றும்
பெரும் ஆள்
ஆனான்
பெருமாள்
ஆனான். (அரச மரத்தினடி )
விளக்கம் :
1. அரச குமாரன் சித்தார்த்தன் ஒரு அரச மரத்தடியில் தன் சந்தித்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு அதனை சிந்தித்து ஆழ்நிலை தியானத்தில் ஆழ்ந்த போது எளிதில் யாராலும் காண முடியாத அருட் பெருஞ் ஜோதியை தன் உள்ளில் கண்ட நொடி அவன் அந்த மரத்தின் பெயரால் (போதி ) பௌத்தானான்.
2. கல் ஆல மரத்தினடியில் நான்கு சனகாதியர் தவம் இயற்றிய போது அந்த கல் மரம் அவர்களுக்கு ஞானம் வழங்கியது. அந்த கல் ஆல மரத்தினையே சிவன் கோவில்களில் தெற்கு நோக்கி அமர்ந்த ஞானியாக உருவகப்படுத்தி அந்த மரத்தினை நாம் வணங்கி அந்த மரத்தினடியில் நாமும் தவம் இயற்ற வேண்டும் என்று வழக்கப்படுத்தினர் நம் முன்னோர். மரங்கள் எல்லா நேரங்களிலும் பிரபஞ்ச பேராற்றலுடன் தொடர்பிலேயே இருப்பதால் மரங்களால் பிரபஞ்ச ஞானத்தை எளிதில் கிரகித்து தரவல்லது.
3. அசுரன் சூரபத்மன் மரம் என்னும் உயர் நிலையில் நின்ற போது அவனின் அசுர குணங்கள அனைத்தும் நீங்கி தூய உள்ளம் பெற்றதனால் முருகப் பெருமான் அவனை கொல்லாமல் அவனை மயிலாகவும் சேவலாகவும் ஏற்று தன்னுடனே இருக்கும் படி செய்தார். அதாவது மாய சக்தியின் மூலம் ஒருவன் மர உரு எடுத்தாலும் அவன் தெய்வ தன்மை பெறுகிறான் என்று விளங்குகிறது.
4. வேடனாக வாழ்க்கை வாழ்ந்து பல உயிர்களை தினமும் கொன்ற ஒருவர் வன்னி மரத்தினடியில் அமர்ந்து தவம் இயற்றியவர் முக்காலமும் உணர்ந்த ஞானியாய் "மரம்" என்ற புனித சொல்லை அதன் தத்துவத்தை விளக்க "ராமாயணம்" என்ற காப்பியமாக படைத்தார்.
5. மரம் உயிரினங்கள் அனைத்திலும் மிக உயர்ந்த உயிரினம் அவை தான் மட்டும் வாழாமல் பல உயிர்கள் வாழ்வதற்கும் தளம் அமைத்து தருகிறது. பிரபஞ்ச அதிசயம் மிக சிறிய ஆலமரத்தின் விதையில் மிக விரிவான மரமாக விஸ்வரூபம் எடுக்கிறது.
6. ராமன் என்ற அரச குமாரன் தன் அரண்மனை சுக வாசங்களை துறந்து மரங்கள் அடர்ந்த காட்டில் 14 ஆண்டுகள் வாழ்ந்ததால் அவன் அவதாரமாக உன்னத நிலைக்கு உயர்ந்தான். அதாவது மரங்கள் அந்த மனிதனை தன்னை உணர்ந்த மெய் ஞானியாக்கி அவதாரம் என்று போற்றும் படி உயர்ந்தான். பெருமாளின் ( விஷ்ணுவின்) அவதாரங்களில் மிகவும் போற்றப்பட்டது.






Comments
Post a Comment