இந்த பிரபஞ்சம் யாரையும் ஒரு செயலை செய்ய தூண்டும் முன்பு அதற்கு தயார்படுத்துகிறது . வேடுவராக பல ஆண்டுகள் வாழ்ந்த பின் திரு. ரத்னாகரரை தீடீரென்று வன்னி மரத்தினடியில் தவமியற்ற வைக்கிறது. அந்த தவம் வேடுவரை மாபெரும் முனிவராக்குகிறது. அந்த பிரபஞ்ச பேராற்றல் அந்த மனிதனின் மனம் என்ற தளத்தில் இந்த பூமியை ஆள எத்தகைய அரசன் வேண்டும் என்று சிந்திக்க தூண்டுகிறது. வன்னிமரத்தினடி தவம் அந்த முனிவனை இயற்கையோடு இரண்டற கலக்க வைக்கிறது. கரையான்களால் கூட அவன் ஒரு மனித உடல் என்று உணராமல், ஒரு உன்னதத்தை தாங்கி நிற்கும் எங்கும் பூரணமாக நிறைந்திருக்கும் பேராற்றலாக உணர்ந்து, அந்த இறைக்கு கரையான்கள் மண்ணிலேயே கோவில் எழுப்பி அவனை மூடச் செய்து அவன் இறை நிலையை இரவு பகலாக பாதுகாத்து வந்தபின் அந்த வன்னி மரத்தின் அடியில் அவன் "மர"த்து போயிருந்த போது ஒரே ஒரு சலனமாய் ஒரு இலை மெல்லிய பூங்காற்றில் அவன் உடலில் உள்ள அங்கமெங்கும் நுழைந்து வாயின் உதட்டருகே இருந்து மெல்லிய இடைவெளியில் " மரா மரா மரா " என்று ஒலி" யாக " வெளி வந்தது. அந்த மெல்லிய ஒலியின் மணம் அந்த வனமெங்கும் பரவியது. பல உயிர்கள் அந்...