அவள் அவன் ஆட்டம் ஆலங்காடு She He dance in Banyan forest
அந்த ஆலங்காட்டு திருச்சபையில்
அவள் ஆடுகின்றாள்
நடுநிசியில்
களி மிகு நடனத்தை
கண்டுவிட்டு
கங்காதரனும்
களம் புகுந்தான்
ஆட்டத்தை கண்டதுமே
அந்த பாரதியும்
மகா கவியானான்
சிவனின் ஆட்டத்தை
கண்டிடவே
தலை காலாய்
அவன் அம்மை வந்தாள்
தோட்டினையே
காலால் செவியில்
மாட்டிக் கொண்டான்
ஆடிய பாதம்
நிற்கவில்லை
நின்றால் இங்கே
இயக்கமில்லை
ஆட்டத்தினால்
மாங்கனி தாயும்
பேயானாள்
ஆலங்காட்டு
சடையன் அவன்
விரித்த விழுதால்
மரமானேன்
நான் கண்ட காட்சி
மறக்கவில்லை
நானே சாட்சி
உறக்கமில்லை
களக்காட்டு கவிராயர்
டிசம்பர் 2025










Comments
Post a Comment