நானும் கவிஞன் தான் I am also a Poet



 நா.முத்துக்குமார்

பாடல்களை

தொ. கா. வில்

பலர் வகை

தொகையில்லாமல்

பாடிக் கொண்டிருந்ததை

பார்த்தேன் கேட்டேன்


நாமும் குமார் தானே

பாட போகலாமா

தமிழை நான்

 பாட  வேண்டாமா 

என்று தயங்கினேன்

நம் பெயரில்

 "முத்து"இல்லையே 

என்று மயங்கினேன்


" முத்து குளிக்க வாரீகளா 

மூச்சை அடக்க வாரீகளா " 

"முத்தை"யாவின்** பாடல்

வரிகள் வரவேற்றது


முத்தெடுக்க

தூத்துக்குடி

"தான்" போக

வேண்டுமா ?

எட்டய புரத்தில்

தான் பிறக்க

வேண்டுமா ?


யுக பாரதி உண்டு

பழனி பாரதி உண்டு 

யுகத்துக்கே ஒரு

பாரதி தான் உண்டு

எவரேனும் சொல்லிடுவர்

என்ற அச்சமுண்டு 


இன்று கடையேனும் 

கவிதை எழுத

வழி உண்டோ ?

என்றே மலைத்தேன்

கடையத்து காரிகையை 

கரம் பிடித்து

அக்னி வலம் வந்து

அகத்து காரி ஆக்கியவன் 

கரம் பிடித்து

கவிதை வயலில்

உழ சொல்லி 

தருவானோ தமிழ்பதத்தை


திருநெல்வேலிகாரன் என்று

தமிழ் அல்வா கிண்ட விடுவானோ

தமிழ் வரவில்லை என்றால்

அருவா தீட்டி வருவானோ 

வாஞ்சி மணியாச்சி வந்ததும்

சுட்டு சாம்பலாக்கி விடுவானோ 


திருவல்லிக்கேணியில் 

நீ பிறந்ததால்


நான் இறந்தேன் என்று 

யானையால் மிதிப்பானோ 


பார் அதி சின்ன பயல்

என்று மட்டம் தட்டி விடுவானோ


புலி உறும

புள்ளிமான் ஓட 

வண்டினங்கள் 

சத்தம் இட

வல்லூறும் 

வட்டம் இட

சொல்லூறும் 

என் நாவில்

களக்காட்டு 

இதிகாசம் பாட

கவிராயர்

பிறந்துவிட்டான் 


களக்காட்டு கவிராயர்

Kalakkaattu Kavirayar

Feb & March 2026


பின் குறிப்பு :

** கவியரசர் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா


ஞான பீடு அற விருது :

என்னுடைய கவிதைகளுக்கு ஞான பீட விருது கொடுக்க யாரும் முன் வர வேண்டாம் 😁😁 ஏனென்றால் எனக்கு எந்த விருதையும் விலை கொடுத்து வாங்கும் எண்ணம் இல்லை.  இலக்கியம், இலக்கணம் இல்லாமல் வெறும் பண மடி கனம் இருப்பவர்களுக்கு மட்டுமே இருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்பதை தெளிவாக அறிவித்துவிடலாம்.


யுடியுப்பில் இந்த கவிதையை கேட்க


இந்த கவிதையை யூடியுப்பிலும் வெளியிட்டுள்ளோம். அதனை கேட்க, பார்க்க இங்கே க்ளிக்கவும்

https://youtube.com/shorts/JcmAz6AmWSc?si=N7q8_juTg420eeiq


Comments

Popular posts from this blog

GU RU Purnima - Dispelling Darkness to Light

A Pedestrian Paramacharya

Sindoor - door of sins பார் அதி புதுமை பெண்