Sindoor - door of sins பார் அதி புதுமை பெண்



சிந்து நதி கரையோரம்
சிந்திய உதரம்
சிந்தனை கலக்கம்
சிந்தூர பெண்ணே
சீ ! இந்து !! என்று
சீண்டியவன்
சுட்டுவிட்டான்
சுற்றுலா வந்தவரை
சுட்டானோ நெற்றிப் பொட்டில்
சுடாரான உன் நெற்றிப் பொட்டில்
சூன்யமாக்க நினைத்தானோ
சூத்திரங்கள் மறந்துவிட்டான்
ஆத்திரம் கொண்ட அண்டைவீட்டான்
அண்டம் நடுங்கிட
அணுகுண்டு வீசிடுவேன் என்றான்
அரண்டு போய்
அடங்கிடுவாய் என்றே நினைத்தான்

பெண்ணடிமை நாட்டினில்
பெருவாய் விட்டு கூவியவன்
பெண் தானே என்று
பெகல்காமில் விட்டுவிட்டான்
ஏப்ரல் மாதத்தில் முட்டாள்

பாரதியின் புதுமை பெண்
பார் அதி புதுமை பெண்
பார் அதிர பறந்து வந்தாள்
போர் விமானத்தில் குண்டு வீச

பாகற்காய் நறுக்கும்
பதுமை பெண் என்று நினைத்தாயோ
பாக்கி யின் வால் அறுக்கும்
புதுமை பெண் என்று அறிவாயே

பீர்க்கங்ககாய் கூட்டு செய்யும்
மாட்டு பெண் என்று நினைத்தாயோ
பீரங்கிகளையும் போட்டு தாக்கும்
பாரத நாட்டு பெண் என்று அறிவாயே

முக்காடிட்டு
முழங்காலிட்டு
மூலையில்
முடங்கும்
முட்டாள்
பெண் என்று
நினைத்தாயோ ?

மோடியின் பெண்
மோதி பார்க்கவும்
தயங்க மாட்டாள்
ஓடி ஓடி ஒளிந்தாலும்
தேடி தேடி வந்து தாக்காமல்
ஓயமாட்டாள்
பெண்ணை மதிக்காத
உன் நாட்டில்
இனி சிந்துவும்
பாயமாட்டாள்
Sin doers of
Pakistan
opened
Doors of Sins

Sindoor is an
Operation
to Cut
the Tumor
of Terror

Kalakkaattu Kavirayar
களக்காட்டு கவிராயர்
7th May 2025

Comments

Popular posts from this blog

GU RU Purnima - Dispelling Darkness to Light

A Pedestrian Paramacharya