Posts

களக்காடு கிருஷ்ணனை பாடுவோம்

Image
  களைமிகு காட்டானை புலிமிகு காட்டாறை குழல் கொண்டு ஊதும் மேய்ப்பானை வெண்ணைமிகு மண்பானை உண்டும் தவழ்வானை வானம் பொழிவானை வணங்கும் தமிழ் மண்ணே இந்த எழில்மிகு திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் அடர்ந்த காடுகள் புலிகளின் வாழ்விடத்தால் புகழ்பெற்ற களக்காடு மலைதொடரின் அடிவாரத்தில் இருக்கும் களக்காடு என்னும் சிற்றூரில் கையில் வெண்ணையுடன் யாதுமறியா பாலகன் யாதுமாகி நிற்கின்றான் அந்த யதுகுல திலகம். மிக சமீபத்தில் அவன் எங்களை எந்த முன்னறிவிப்புமின்றி பகல் ஒரு மணியளவில் களக்காட்டிற்கு வரும்படி  செய்துவிட்டான். நண்பகலில் கோவில் திறந்திருக்குமா ? கண்ணனை காண முடியுமா ? குறைந்தபட்சம் கோவில் மண்ணையாவது வணங்கிவிட்டு வருவோம் என்று தலமிறங்கினோம்.  கதவிடுக்கு மூலமாக அவன் திருக்கோலம் கண்டு மகிழ்ந்தோம். அந்த மாயாவி அத்துடன் விடாமல் நாங்கள் கோவிலில் நின்று கொண்டிருப்பதை திரு. SRS மணியன் அவர்களுக்கு காட்டிக் கொடுத்தான் அந்த மாயச் கறுத்த சிறுவன்.  திரு. மணியன், எங்கள் முன்னோர்கள் இந்த புண்ணிய தலத்தில் பிறந்து வளர்ந்த விவரம் எங்களிடமிருந்து அறிந்த பின் எங்களை கோவிலுக்குள் வருமாறு ...

என்று காயுமோ சிலுவையில் இரத்தம்

Image
  உ க்ரைனில் உதைக்கிறேன்  என்ற விளாடிமிர்  வினைக் கொண்டும்  விளையாடும் இவர்  கனிம வளம் கவர  கனியுமோ இவர் மனம்  பு டின் பிடன் என்ற  இரு கத்தோலிகரை  இணைக்க மறந்ததேன்  வாட்டிகன்  என்றும் பிரிப்பது  பெண்டகன்  அனைத்து கண்களும்  " கன் "கள் மீது தான்  ( இதையும் படித்து பாருங்கள்   https://thebulletin.org/2019/06/blessing-the-holy-icbms-the-russian-orthodox-church-and-putin/  ) அ ன்பாய் விரியச்  சொன்ன யூதனின்  சொல் மறந்து  யுத்தம் பிறந்து  என்று தான்  காயுமோ சிலுவையில்  இரத்தம்  கி ளாஸ்கோ தின்னும்  பேபி கூட மாஸ்கோ  என்றதும் மாஸ்க்  இல்லாமல் வாயை  மூடிக் கொள்வதேன் பேரிக்கா தின்பவனையும்  மெறிக்க முனைவதேன்  மெரிக்கா அமெரிக்கா  பி டனும் புடினும்  ஏன் மோதி கொள்கிறார்கள்?  ஏன் மோதி "கொல்" கிறார்கள்?  மோதி தலையிடுவாரா?  மோதிலால் மகன் போல்  புறா பறக்க விடுவாரா??   அ டுத்தவன் வீட்டு விவகாரத்தில் என்றைக்கும் மூக்கு நு...

Sound Light Delight in Abundance - Vallalar

Image
ஒளியும் ஒளியும் குகைதான் உடலோ !!! ஊனுடம்பே ஆலயம் என்பதன் மூலமோ !! மறையும் மறையும் ஓதும் உணர்வோ !!! ஓலியாத மனமும் ஒளியாத தவமும் ஈர்க்கும் குணமோ !!! ஓலிதான் குகமோ ஒளிதான் சிவமோ !!! ஓலியும் ஒளியும் இணைந்தால் மழையோ !!! அருளும் மழைதான் ஆனந்த ஜீவகாருண்யமோ !!! வாடும் பயிரை வாடாமல் காக்கும் இயற்கையின் ஒழுங்கோ !!! அடங்கா ஒளியை அடைக்கதான் வெண்துணியோ !!!! வள்ளலே விரிந்தபின் அடக்கும் கடையும் கொள்வதும் எளிதோ ???? தையில் பொங்கலோ ஒளியின் பொங்கலோ பூசத்தில் பூஜிக்கின்றேன் அருட்பெருஞ்  ஜோதியே !!!   வள்ளல் ஜோதி இராமலிங்க சுவாமிகள் எந்த ஒரு கூட்டிற்குள்ளும் அடைக்க முடியாத எல்லையற்ற ஒளி உருவமாக உலகத்தில் ஒளியின் சாத்தியத்தை உலகத்தவருக்கு உணர்த்திய நாள் தை பூசம். அவர் ஒரு வெள்ளைதுணி கொண்டு தன் தலை வரை முக்காடிட்டு அந்த ஒளி உடலை மறைத்து இந்த உலகில் பிறந்த பிறக்கப் போகின்ற அனைத்து உயிர்களுக்கும் பிரபஞ்சத்தின் ஒளித்தன்மையை உணர வெளிப்படுத்த வாய்ப்புள்ளது அதற்கான வழியையும் வள்ளலார் அனைவருக்கும் வழங்கியு...

MGR 105

Image
  மதன கோபால இராமசந்திரன் எம்ஜிஆரை பார்த்த பின்னே எம்மூஞ்சியாரு பார்ப்பார் ??? வந்தது கலக்கம் பிறந்தது கலகம் பிரிந்தது கழகம்   ஆரூரில் பிறந்தது தட்சணை அணைத்த மூர்த்தி எழும்பூர் வரை நீண்ட இருப்பு பாதையின் கீர்த்தி கூவம் அங்கே நாறுது பார் நிதி பல வேண்டி   வாரி வாரி வழங்கியவர் வள்ளலாரு வாழும் போதே வள்ளல் என்றவர் வாரியாரு வந்தவர்கெல்லாம் ஊட்டுவாரு சோறு வறுமை என்றதுமே இராமாபுரத்தை (தில்) அடைவாரு ( அடை ஆறு) கருமை என்றதுமே கோபால(னின்) புறத்தை தானே நினைப்பாரு பெற்றால் தான் பிள்ளையா ? பெறாமலே பெற்றதை போல் வளர்த்தாரு பெற்றதற்காகவே வாழ்வோர் மத்தியிலே பெறாதவருக்கும் பெற்றதை தந்தாரு அம்மூவையும் ஆளாக்கியவர் அம்”முகா”வையும்   அரசேற்றியவர் அதிமுகாவையும் அரங்கேற்றியவர் காலம் மட்டும் பொறுத்திருந்தால் கிண்டியும் கண்டியை தொட்டிருக்கும் என்றைக்கும் இராமசந்திரன் என்றாலே இலங்கைகும் குளிரெடுக்கும். 17 ஜனவரி 2022

Merry Chrishna

Image
  கிருஷ்து  கருத்த சிறுவனின் கருத்து அவனை கவர்ந்ததால் யோசுவா கிருத்தவன் ஆனான் மூங்கில் குழலால் மயக்கும் வண்டிசை மலர்ந்த மனங்கள் மறைந்த பகைகள் விரிந்த கைகள் யுத்த கீதை ( கேட்டே ) வியந்த சிந்தை இதுவே எந்தை ( என்றது ) யூத குழந்தை யாதுமாகி நின்ற யாதவனும் சூதறியா சூசையனும் மாரியிடத்தில் மாறியவனும் மேரியில் உதித்தவனும் அனைத்திலும் மாய கண்ணனடா அறைந்தாலும் காட்டுவது மறு கன்னமடா விரிவடைய விரும்பும் மனமெல்லாம் வானம் பொழியும் மழையெல்லாம் இணைக்கும் நம்மையெல்லாம். ஜெருசேலத்தில் பிறந்த ஜோஷுவாவிற்கு அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு பெருக்கெடுத்தது. அனைத்து உயிர்களையும் இணைக்கும் அந்த அன்பு என்னும் உள்ளம் மலர்ச்சியை உணர கிருஷ்ணனின் அன்பு தத்துவம் கவர்ந்து அவரை சிந்து நதியின் கீழ் பகுதிக்கு அழைத்து வந்தது. “கிருஷ்ண” என்னும் அன்பின் மகிமையில் தோய்ந்த அந்த மகா யோகி தான் உணர்ந்ததை தன் மக்களும் உணர அந்த தத்துவத்தை தன் ஹிப்ரூ மொழியில் “கிருஷ்து” என்றழைக்க. சிந்து நாகரீகத்தை தன் மொழியில் விளக்க , அதன் பின் அனைத்து உயிர்களிடத்தும் அன்புக் காட்டிய அந்த இளைஞன் “...

No stains on You Gopala

Image
  குறையொன்றுமில்லை கோபாலா !!  ராஜ கோபாலா !!!  வெளுத்தபாலே விஷமான பின்னாலே ! உளுத்ததெல்லாம் அரசியல் பேசும் முன்னாலே ! வெளுத்த உப்பை எடுத்தாய் நின் கையாலே ! (  https://en.wikipedia.org/wiki/Vedaranyam_March   ) வெள்ளையன் சட்டத்தை வெளுத்தெல்லாம் நின் வாயாலே ! விடமாட்டேன் என்றவனை தட்டிவிட்டாய் மதியாலே தொடாதவரை கூட்டிச் சென்றாய் மலை மேலே ( https://hindutemplefacts.wordpress.com/tag/kurai-ondrum-illai/ ) காந்தியையும் கண்டித்தாய் மனசாட்சி போலே பாரதியை உயர்த்திவிட்டாய் அகக்காட்சியாலே   ஈரோட்டு ஆசாமி தறிகெட்டு பேசிடினும் முறைகெட்டு போன பின்பும் ராம  சாமியை வசைபாட சென்றிடுனும்  நட்பால் நல்பண்பு காத்த மரமே ! முதிர்ந்த நெல்லிகனிபோல் உன் மூதுரைகள் முன்னே கசந்திடினும் என்றென்றும் தித்தித்த சேலத்து மாம்பழமே   நேருவிற்கு நேர் எதிரே நேர்வழி காட்டிடவே சுதந்திராவை கண்டெடுத்தாய் இந்திராவை கண்டவுடன் கழகத்தையும் ஆதரித்தாய்   வீண்பழிக்கு ஆளாகி வெட்டிபேச்சுக்கு இரையாகி சுட்டிபேசுவோர் கதையாகி நின்றாலும் நிற்காமல் கொட்டும் மழையிலும் குடி கெடுக்கும் குடி தடு...

Demon to Tree to Peacock

Image
  அசுரன் மரமானதால் மயிலாகினான் பாரதத்தில் பல தெய்வங்களின் திருவிளையாடல்கள் பற்றி பல புராணங்கள் விவரிக்கின்றன. அது தீபாவளி பண்டிகை என்றால் அதில் நரகாசுரன் என்ற அரக்கனை அவனை தாய் பூமா தேவியின் அவதாரமான சத்ய பாமா கொல்வதால் கொண்டாடப்படுவது என்றும் , விஜய தசமி என்றால் அதில் இராமன் இராவணனை கொன்றான் அல்லது துர்க்கை அரக்கனை கொன்றதால் கொண்டாடப்பட்ட ஒரு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.  ஆனால் திருசெந்தூரில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி - இன்று ( 9 நவ 2021) சுக்ல பக்ஷ சஷ்டி ( அமாவாசை முடிந்ததில் இருந்து ஆறாவது நாள் ) ஒரு சிறப்பு அம்சத்தை கொண்டுள்ளது. காசியப முனிவரின் மகனான சூரபத்மன், தன் தவ வலிமையினால் அடைந்த தவ சித்துகளை பிற உயிர்களுக்கு தீங்கிழைக்க பயன்படுத்தியதால் அனைத்து உயிரினங்களும் முருக பெருமானிடம் வேண்டுகோள் விடுத்தன.  அதன் பொருட்டு போர் களத்திற்கு வந்த முருகனை அசுர படைகள் பல விதங்களில் எதிர்கின்றன. அனைத்து அசுரர்களும் முருகனின் பேராற்றலால் மடிந்து போகிறார்கள். ஆனால் அரக்கர்களின் தலைவன் கடைசியாக போருக்கு வரும் போது தன் மாய சக்தியால் பல உருவங்களை எடுக்கிறார்.  போர் கடுமையாக ந...