என்று காயுமோ சிலுவையில் இரத்தம்

 க்ரைனில் உதைக்கிறேன் 

என்ற விளாடிமிர் 

வினைக் கொண்டும் 

விளையாடும் இவர் 

கனிம வளம் கவர 

கனியுமோ இவர் மனம் 



புடின் பிடன் என்ற 

இரு கத்தோலிகரை 

இணைக்க மறந்ததேன் 

வாட்டிகன் 

என்றும் பிரிப்பது 

பெண்டகன் 

அனைத்து கண்களும் 

"கன்"கள் மீது தான் 

( இதையும் படித்து பாருங்கள் https://thebulletin.org/2019/06/blessing-the-holy-icbms-the-russian-orthodox-church-and-putin/ )

ன்பாய் விரியச் 

சொன்ன யூதனின் 

சொல் மறந்து 

யுத்தம் பிறந்து 

என்று தான் 

காயுமோ சிலுவையில் 

இரத்தம் 



கிளாஸ்கோ தின்னும் 

பேபி கூட மாஸ்கோ 

என்றதும் மாஸ்க் 

இல்லாமல் வாயை 

மூடிக் கொள்வதேன்

பேரிக்கா தின்பவனையும் 

மெறிக்க முனைவதேன் 

மெரிக்கா அமெரிக்கா 


பிடனும் புடினும் 

ஏன் மோதி கொள்கிறார்கள்? 

ஏன் மோதி "கொல்" கிறார்கள்? 

மோதி தலையிடுவாரா? 

மோதிலால் மகன் போல் 

புறா பறக்க விடுவாரா??  


டுத்தவன் வீட்டு

விவகாரத்தில் என்றைக்கும்

மூக்கு நுழைக்கும்

அஜ்"ஜோ" பிடனுக்கு

அறிவுரைக்க

அச்சச்"சோ" ராமசாமி கூட

இல்லை அய்யா

கமலா ஹாரிஸுக்கு

கமல ஹாஸனே தேவலையோ ?


கிருமி வந்து செத்தாச்சு 

ஊசியெல்லாம் வித்தாச்சு 

பெருமூச்சு விட்டாச்சு 

வெடிகுண்டு போட்டாச்சு 

மனிதம் எனும் வெறும் பேச்சு 

எத்தனை போர் பாத்தாச்சு 



போரடித்து விட்டதய்யா 

போர் அடிக்கும் மனிதர் கண்டு 

பூமிக்கு மனிதன் எனும் 

இழி பிறவிகள் இனி வேண்டாம் 

மார்ச்சுக்குள் அனைவரையும் 

மார்ஸுக்கு அனுப்பி விடு 

மரங்கள் மட்டும் போதும் இங்கே 

பூமிக்கு விடுதலை வேண்டுகின்றேன் 

வெள்ளையனின் கொள்ளை குணம் 

வெறுத்த கறுத்த சிறுவன். 


களக்காட்டு கவிராயர்


27. பிப்ரவரி. 2022


Comments

  1. Replies
    1. thank you. But the situation of humanity is more bothering and the intention pf the poem is to create awakening

      Delete
  2. What a poem. Very topical excellent

    ReplyDelete
    Replies
    1. Thank you. I wish to create the content which celebrates humanity. The brutal majority is destructive

      Delete

Post a Comment

Popular posts from this blog

GU RU Purnima - Dispelling Darkness to Light

A Pedestrian Paramacharya

Sindoor - door of sins பார் அதி புதுமை பெண்