Posts

Kannadasan 95

Image
  கண்ணதாசன் 95 செந்தமிழ் தேன் மொழியால் பாட்டும் நீயே பாவமும் நீயே பாடிய உன்னையே பாட வந்தேனே !!!   விசுவின் இசையும் தேவனின் (மகா ) மெட்டும் மனதில் பதியும் உன் துள்ளல் பாட்டாலே   நச்சுண்ட ஈசனும் நடிக நாத்திகர் மத்தியிலே நடமாட வைத்தானே   ஓடும் ரயிலின் இருப்பு பாதையில் கழக போதையில் தலை வைக்க வைத்தானே   ஓடா ரயிலும் தண்டவாள தலையும் வண்டவாளம் அனைத்தையும் இசைப்பட சொன்னானே   பட்டினத்தாரையும் பகவத் கீதையும் பாமர இசையில் படம்பிடித்து சொன்னானே   நாட்டின் கோட்டையிலே நிதி சேர்க்கும் வேட்கையிலே அடுக்கு மொழி பேசிய அற்பர்கள் மத்தியிலே   நாட்டுக்கோட்டையிலே நல்லறத்தை காட்டிடவே பாட்டுக்கோட்டையிலே பிறவியை புட்டு வைத்தவனே   வைரத்திற்கும் முத்திற்கும் பட்டம் தேடும் தலையிருக்கும் சிறிஞர்கள் மத்தியிலே கிடைக்காத அறிய முத்தையா தமிழின் சொத்து அய்யா !!   உனக்கு பிறகு அனைத்தும் பணத்திற்கும் பதவிக்கும் பட்டத்திற்கும் பகட்டிற்கும் பாட்டு எழுதும் பல்லிளிக்கும் சொத்தைய...

The prince sat under a Tree

Image
  ராகம் : மதுவந்தி   ( கண்ட நாள் முதலாய் சாயலில் ) 1.   அரச மரத்தினடி அமர்ந்த அரசனடி  அடிமுடிகாணா அரிய ஜோதியை காண  (அரச மரத்தினடி ) 2. ஆ ல மரத்தினடி அமர்ந்த தென் திசை முனிவனடி சனகாதியருக்கு உரைக்காமல் உணர்த்திய  ( ஆல மரத்தினடி ) கல் ஆலமரத்தினடி குருவினடி 3. அ சுரனும் மாமரமாய் ஆனதினால் மலைக்குருவும் அவனை தன் சின்னமாய் ஏற்றானடி 4. அ ம்புகள் எய்து அனுதினம் கொன்றவனும் வன்னி மரத்தினடி அமர்ந்ததினால் வான்மீகி ஆனானடி   5. ம ரம் போல் விரிய மனமும் விழைய தான் மட்டும் வாழாமல் பல் உயிர் ஓம்பும் மரம் போல் வாழ (அரச மரத்தினடி )   6. அ ரண்மனை துறந்து காட்டிலே வாழ்ந்ததால் அரசனும் அவதாரம் ஆனான் மரவுரி தரித்ததால் மறை போற்றும் பெரும் ஆள் ஆனான் பெருமாள் ஆனான். (அரச மரத்தினடி ) களக்காட்டு கவிராயர் கிருஷ்ண குமார் விளக்கம் : 1. அரச குமாரன் சித்தார்த்தன் ஒரு அரச மரத்தடியில் தன் சந்தித்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு அதனை சிந்தித்து ஆழ்நிலை தியானத்தில் ஆழ்ந்த போது எளிதில் யாராலும் காண முடியாத அருட் பெருஞ் ஜோதியை தன் உள்ளில் கண்ட நொடி அவன் அந்த மரத்தின்...

இராமாயணம் பிறந்த இடம்

Image
                   இராமாயணம் பிறந்த இடம் 17.3.2020                                                           ராகம் : ஹிந்தோளம் வா ருங்கள் வான்மீகியூருக்கு வாருங்கள்  திரு வான்மீகியுருக்கு வாருங்கள் ஈ சனை காண வாருங்கள் மருந்தீசனை காண வாருங்கள் ஈசன் ஈசன் ஈசன் மருந்தீசன் ரா ம ராம ராம ராமா ராம ராம ராம ராமா என்றே சதா ஜபிக்கும் சதா சிவனை காண வாருங்கள்  3 ந ச்சுண்ட  ந மசிவாயனும் நா வினிக்க  ந வின்ற  நா மம்       4 (ராம ராம ராம ராமா ) ரா ம நாதத்தின் ரூபம் காணவே நாரதனை பணித்தனன் நாத சொரூபன் ரா மாயணம் படைக்க வேடனின் வேதனை  தணிக்க வன்னிகாட்டில்  தன்னை மறக்க மரா மரா என்று உருவேத்தினன் அயன் மகன்         2 பு றத்தீ கூட்டும் வன்னி அகத்தீ ஏற்றும் வன்னி அகத்தியரும் சிவமாய் கண்ட வன்னி வன்னி நீ மரமா மரமா மரமா ம ராம ரா ம என்னும் சத...

மண் புழுவே உழவனடி

Image
                         அடி தேடி போனேனடி ( முதலாம் ஏப்ரல் 2020 - வெள்ளிக் கிழங்கு தோண்டி எடுத்த போது உதித்த அடிக ள் )                                               பாடலின் இராகம் : சண்முக ப்ரியா  அடி தேடி போனேனடி அண்ணன் அடி தேடி போனேனடி (2) மலையினடி இருப்பதாக சொன்னானடி தேடி தேடி களைத்த ஆதி திருவரங்கன் அயர்ந்ததாக சொன்னானடி (1*)  சக்கரத்ததாழ்வாரும் போற்றும் மாதவனும் காணாததடி நம்மாழ்வார் அடிப்பொடி மா தவம் செய்யாமல் கண்டேணடி ( 2*) அருணகிரிக்கு அடி எடுத்து கொடுத்த ஆனை மணாளனும் (தேவ) வள்ளிக் கிழங்காக அடி காட்டிக் கொடுத்தானடி (3*) பத்தவதாரம் கண்டவனும் காணாததடி வெண் தாடிக் காரன் காண்பித்தானடி களக்காட்டில் சத்திய வாக்கு எடுத்தானடி உண்மையை ஊருக்கு உரக்க உறைப்பேன் உரைக்க உறைப்பேன் என்றானடி (4*) உழவனடி தொழவேண்டுமடி உலகம் உய்விக்க மூவடி எடுத்தானடி மாடுகள் மேய்த்தானடி சாணத்தை உரமாக்க புழுவாகவும் அவதாரம் எடுத்தானட...

களக்காடு கிருஷ்ணனை பாடுவோம்

Image
  களைமிகு காட்டானை புலிமிகு காட்டாறை குழல் கொண்டு ஊதும் மேய்ப்பானை வெண்ணைமிகு மண்பானை உண்டும் தவழ்வானை வானம் பொழிவானை வணங்கும் தமிழ் மண்ணே இந்த எழில்மிகு திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் அடர்ந்த காடுகள் புலிகளின் வாழ்விடத்தால் புகழ்பெற்ற களக்காடு மலைதொடரின் அடிவாரத்தில் இருக்கும் களக்காடு என்னும் சிற்றூரில் கையில் வெண்ணையுடன் யாதுமறியா பாலகன் யாதுமாகி நிற்கின்றான் அந்த யதுகுல திலகம். மிக சமீபத்தில் அவன் எங்களை எந்த முன்னறிவிப்புமின்றி பகல் ஒரு மணியளவில் களக்காட்டிற்கு வரும்படி  செய்துவிட்டான். நண்பகலில் கோவில் திறந்திருக்குமா ? கண்ணனை காண முடியுமா ? குறைந்தபட்சம் கோவில் மண்ணையாவது வணங்கிவிட்டு வருவோம் என்று தலமிறங்கினோம்.  கதவிடுக்கு மூலமாக அவன் திருக்கோலம் கண்டு மகிழ்ந்தோம். அந்த மாயாவி அத்துடன் விடாமல் நாங்கள் கோவிலில் நின்று கொண்டிருப்பதை திரு. SRS மணியன் அவர்களுக்கு காட்டிக் கொடுத்தான் அந்த மாயச் கறுத்த சிறுவன்.  திரு. மணியன், எங்கள் முன்னோர்கள் இந்த புண்ணிய தலத்தில் பிறந்து வளர்ந்த விவரம் எங்களிடமிருந்து அறிந்த பின் எங்களை கோவிலுக்குள் வருமாறு ...

என்று காயுமோ சிலுவையில் இரத்தம்

Image
  உ க்ரைனில் உதைக்கிறேன்  என்ற விளாடிமிர்  வினைக் கொண்டும்  விளையாடும் இவர்  கனிம வளம் கவர  கனியுமோ இவர் மனம்  பு டின் பிடன் என்ற  இரு கத்தோலிகரை  இணைக்க மறந்ததேன்  வாட்டிகன்  என்றும் பிரிப்பது  பெண்டகன்  அனைத்து கண்களும்  " கன் "கள் மீது தான்  ( இதையும் படித்து பாருங்கள்   https://thebulletin.org/2019/06/blessing-the-holy-icbms-the-russian-orthodox-church-and-putin/  ) அ ன்பாய் விரியச்  சொன்ன யூதனின்  சொல் மறந்து  யுத்தம் பிறந்து  என்று தான்  காயுமோ சிலுவையில்  இரத்தம்  கி ளாஸ்கோ தின்னும்  பேபி கூட மாஸ்கோ  என்றதும் மாஸ்க்  இல்லாமல் வாயை  மூடிக் கொள்வதேன் பேரிக்கா தின்பவனையும்  மெறிக்க முனைவதேன்  மெரிக்கா அமெரிக்கா  பி டனும் புடினும்  ஏன் மோதி கொள்கிறார்கள்?  ஏன் மோதி "கொல்" கிறார்கள்?  மோதி தலையிடுவாரா?  மோதிலால் மகன் போல்  புறா பறக்க விடுவாரா??   அ டுத்தவன் வீட்டு விவகாரத்தில் என்றைக்கும் மூக்கு நு...