தாமதம் ஏன் கண்ணா ? Why the Delay krishna ?
தாமதம் ஏன் கண்ணா ? ( Why the Delay Krishna ? ) உனை பாடுவோருக்கு அருள் செய்ய காக்கை சிறகினிலே உன்னையே கண்டு திக்கு தெரியாத காட்டில் தேடி தேடி அலைந்து பார்த்த சாரதியை பார்த்த பாரதியை நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிந்ததேனோ ஏனோ ? ஏனோ? ஏனோ? நாத்திக சிகாமணியை உன் தாசன் ஆக்கிய கண்ணா ஆயர்பாடி மாளிகையில் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே விஸ்வ நாதன்இசையில் பாட வைத்து உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்று எழுதி வஞ்சகன் கண்ணன் என்று பாட வைத்தது ஏனோ ? ஏனோ? ஏனோ? ஊத்துக்காடு கண்ட தரிசனமே காண அலைபாயுதே கண்ணா என்று பாடிய மகராஜனின் சந்தானத்தை புறம் எங்கும் கான மூர்த்தே என்று நின்னை பாடி ரசிகரை பரவசமாய் பார்த்தனுக்கு தேர் ஓட்டிய நீ பாடகனுக்கு கார் ஓட்ட மறந்தது ஏனோ ஏனோ ஏனோ ? உன் பெயர் வைத்தும் கோபால கிருஷ்ண பாரதியார் உன் ஆடலை பாடாமல் போன அந்த பாரதி யார் கோபாலா கிருஷ்ணா ஆடும் சிதம்பரமே தில்லை வன காட்டில் எப்போ வருவாரோ எந்தன் கலி தீர்க்க என்று உன்னை பாடாமல் போனது இதனால் தானோ தானோ தானோ?? தாமதம் ஏ...