கரும்பு புல்லாங்குழல் Sugarcane Flute

 

கரும்பினால் ஆன புல்லாங்குழல்

கரும்பு வனத்தில்

கருத்த சிறுவன் ஒருவன்

கார்மேகம் சூழும் நிலையில்

கவின் மிகு காட்டுக்குள்ளே

மாதுளை பூவுக்குள் முயங்கிய


வண்டொன்று விர்ரென்று வந்து

விஸ்வத்தின் நாதத்தை வாயால்

அவன் தலையை சுற்றி வணங்கி

மாலை இட்ட மங்கை போல்

அவன் காதில் மெல்லிசையிட்டது

கம்பன் விட்ட இடத்தில்

கரும்பனை பாட சொன்னது

மாதுளையில் எத்தனை முத்தைய்யா

நாட்டரசன் கோட்டையில் நல்மாதின்

புதல்வன் அவன்

பட்டுக்கோட்டை விட்ட கோட்டை

பாட்டுக் கோட்டை ஆக்கிடவே

கரும்பிலே துளையிடவே

வண்டிற்கு ஆணையிட்டான்

கரும்பில் ஒரு புல்லாங்குழல்

அவன் வாசிக்க வாசிக்க

அவனை சுவாசிக்க சுவாசிக்க

பார் எங்கும் பாட்டு பித்தர்கள்

கண்ணனின் தாசனுக்கும் தாசனானார்கள்

திருமூலைரையும் பொய்யாக்கினான்


கண்டதை விண்டான்

மெய் மொழி புலவன்

அவனும் இராமன் தான்

“வனவாசம்” கண்டான்

 

செந்தமிழ் தேன்மொழியால்

உள்ளத்தில் நல்ல உள்ளம்

உறங்காது என்பதை

இன்று என் மூலமாகவும்

வெளிவந்தான்

விஸ்வநாதன்.

 

களக்காட்டு கவிராயர்

24 ஜூன் 2025

கண்ணதாசன் – எம் எஸ் விஸ்வநாதனின் நினைவாக



ஒரு கவிஞனும் இசை அமைப்பாளனும் இரண்டற கலக்க முடியுமா ?

கண்ணதாசனும் விஸ்வநாதனும் இரு உருவங்கள் அல்ல அந்த ஊண் உடம்பு என்னும் ஆலயத்தில் இணைந்துவிட்ட ஒரே ஆன்மா.  அதனாலேயே அவர்களால் காலத்தால் அழியாத காவிய பாடல்களை படைக்க வந்த இயற்கையின் உன்னத படைப்பு.

வேறெந்த மொழியிலும் ஏன் தமிழ் மொழியில் கூட இன்னொரு இதே போல் ஈருடல் ஒர் உயிர் பாடல் சங்கமத்தை இது வரை உருவாக்க முடிந்ததில்லை. அதனால் இயறகையும் அவர்களை ஒரே நாளில் படைத்தும் விட்டது. 

 


Comments

Popular posts from this blog

GU RU Purnima - Dispelling Darkness to Light

A Pedestrian Paramacharya

Sindoor - door of sins பார் அதி புதுமை பெண்