Posts

அவள் அவன் ஆட்டம் ஆலங்காடு She He dance in Banyan forest

Image
  அந்த ஆலங்காட்டு திருச்சபையில் அவள் ஆடுகின்றாள்  நடுநிசியில் களி மிகு நடனத்தை  கண்டுவிட்டு கங்காதரனும் களம் புகுந்தான்  அன்னையின் ஆட்டத்தை கண்டதுமே      அந்த பாரதியும்        மகா கவியானான்    சிவனின் ஆட்டத்தை  கண்டிடவே தலை காலாய்  அவன் அம்மை வந்தாள்  தரையில் விழுந்த தோட்டினையே காலால் செவியில் மாட்டிக் கொண்டான் ஆடிய பாதம் நிற்கவில்லை நின்றால் இங்கே இயக்கமில்லை  அடங்கா பிள்ளையின் ஆட்டத்தினால் மாங்கனி தாயும் பேயானாள்  ஆலங்காட்டு சடையன் அவன் விரித்த விழுதால்    மரமானேன் நான் கண்ட காட்சி மறக்கவில்லை நானே சாட்சி உறக்கமில்லை  களக்காட்டு கவிராயர் டிசம்பர் 2025

தாமதம் ஏன் கண்ணா ? Why the Delay krishna ?

Image
  தாமதம் ஏன் கண்ணா ? ( Why the Delay Krishna ? ) உனை பாடுவோருக்கு அருள் செய்ய  காக்கை சிறகினிலே  உன்னையே கண்டு திக்கு தெரியாத காட்டில் தேடி தேடி அலைந்து பார்த்த சாரதியை பார்த்த பாரதியை நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிந்ததேனோ  ஏனோ ? ஏனோ? ஏனோ? நாத்திக சிகாமணியை உன் தாசன் ஆக்கிய கண்ணா ஆயர்பாடி மாளிகையில் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே  விஸ்வ நாதன்இசையில் பாட வைத்து உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்று எழுதி  வஞ்சகன் கண்ணன்  என்று பாட வைத்தது ஏனோ ? ஏனோ? ஏனோ? ஊத்துக்காடு கண்ட  தரிசனமே காண அலைபாயுதே கண்ணா என்று பாடிய மகராஜனின் சந்தானத்தை புறம் எங்கும்  கான மூர்த்தே என்று நின்னை  பாடி ரசிகரை பரவசமாய்  பார்த்தனுக்கு தேர் ஓட்டிய நீ பாடகனுக்கு கார் ஓட்ட  மறந்தது ஏனோ ஏனோ ஏனோ ? உன் பெயர் வைத்தும் கோபால கிருஷ்ண பாரதியார் உன் ஆடலை பாடாமல் போன அந்த பாரதி யார் கோபாலா கிருஷ்ணா  ஆடும் சிதம்பரமே  தில்லை வன காட்டில் எப்போ வருவாரோ எந்தன் கலி தீர்க்க என்று உன்னை பாடாமல் போனது இதனால் தானோ  தானோ தானோ??  தாமதம் ஏ...

Sathya Sai Baba Avatar Song சத்ய சாய் பாபா அவதார நோக்க பாடல்

Image
  சத்ய சாய் பாபா வின் 100 வது பிறந்த நாளுக்குக்கான பாடல் இந்தியில் வந்த மூலப் பாடலான " பிரேம முதித மன்சே கஹோ " நேரடி மொழி மாற்றம் இல்லை . சத்திய சாய் பாபாவை பற்றி பலருக்கும் தெரிந்த விஷயம் அவர் கையை சுற்றி காற்றில் இருந்து தங்க மோதிரம், செயின், டாலர் என்ற பொருட்கள் எடுத்து தருவது தான் பொருள் விரும்பும் மக்களை அதிகம் ஈர்த்தது.  ஆனால் அவரே கூறியபடி உலகின் அனைத்து தரப்பு மக்களையும் " சேவையே பிறப்பின் முக்கிய நோக்கம்" என்ற தத்துவத்தை உணர்த்து ஒரு " visiting card" ஆக பயன்படுத்துவதாக கூறியுள்ளார். எல்லாவற்றையும் விட அவரை பற்றி நேரடியாக தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லாத நாடுகளில் கூட அவரின் சாயி பஜனையும் அதன் மூலம் சத்ய சாயியின் சேவைகள் சென்றடைந்துள்ளது.  அதனால் இந்த தமிழ் ஆக்க பஜன் சாயியின் மிக விருப்பமான பஜனை ஒத்து இருந்தாலும் இது வரை சாயி பஜனைகளில் குறிப்பிடாத பல சேவைகளை அதிலும் இஸ்ரேல் ஈரான் போன்ற பரஸ்பர எதிரி நாடுகளாக நடந்து கொள்ளும் நாடுகளில் கூட சாயி பஜன் மூலமாக அன்பை பரப்புவதே மிக பெரிய சாதனையாகும்.  அதனாலேயே பஜனையில் அவரின் அவதார நோக்கத்தை பாடினோம். Song in...

மறை பொருள் விலக்கிய விளக்கே Veil removing Light

Image
மறை பொருள் ஒன்று திரையின் பின்னே விளங்காமல் மறைந்திருந்தது  மறைவான  அப்பொருளை மறைத்த திரை விலக்கி விளக்க வந்த திரு விளக்கே உணர்ச்சியால் உணர முடியாத உன்னதத்தை உணர்வால்  உணவால் உணர வைத்த உள்ளொளியே  வாடிய பயிரையும்  வாடாமல் காக்க வாரி வாரி வழங்கிய  வள்ளலே நீ விரித்த கடையில் நான் வாங்கிய அக(ல்) விளக்கு அகன்றது என் முன் திரை அகண்டது என் விழித்திரை மறந்தது நித்திரை மரணமில்லா பெருவாழ்வை வந்தவர்கெல்லாம் வாரி வழங்கிய வள்ளல் பெருமானே நான் யார் ? என்று வினவிய அவர் அம்மலை  வலம் வர சொன்னார் அம்மணம் மிகு மலையை வலம் வந்து இடம் நின்ற உண்ணா முலையை அடி ஒற்றி முடி காண அருட் பிரகாசமாய் அது பரவியது அண்ணாந்து அவ்வொளியைப்  அண்ணாக்கு ஓட்ட  அகத்தின் உள்ள அடக்க பார்த்தேன் அது கடை விரித்தது  அதனை கொள்வாரில்லை  அடக்கமில்லா அஜ்ஜோதி மரணமில்லா பெருவாழ்வு அளிக்க தனிப் பெருங்கருணையால் பிறவிக் கடலை  நீந்தும் கலையை கற்பிக்க கருவறை வெளி வந்ததம்மா அவ்வெளிச்சம்    

Krishna Bee I am Tree கிருஷ்ணன் வண்டு நான் மரத்தண்டு

Image
களை மிகு காட்டினில் கவின் மிகு பூக்களில் ரீங்காரமிடும் ஒவ்வொரு வண்டும் கண்ணனை காதலிக்கும் களக்காட்டு கவிராயரே  ! In a Wild Forest In every flower Buzz of bees Brings out a poet Breathing Krishna  களக்காட்டு கவிராயர் Kalakaattu Kavirayar 16.8.25  

Hindi on Tamils lips- KK's Magic

Image
  Mahatma Gandhi attempted Jawaharlal Nehru failed Indira Gandhi faltered  Hindi in lips of Tamils In 1969  Dravidian Anna breath his last  Movie Aradhana came to blast  Where politicians stammered Lingo maniacs hammered  Anti hindi agitation lost its charm "Roop tera mastana" came like storm None could stall In every Tea stall  He was a Ganguly No not the bare chested at lord's  Know knots bare hearted of lords " Dil kya kare" he penetrated hearts He is the Superb Playback singer Even SP Balu admired He was an actor par excellence  Even Amitabh Bachchan revered Every wave In awe His roar (in) Every shore  His fans Will never Allow him to Rest in peace Because He is Kishore Kumar Born on Freedom month Before independence  Broke the barriers  With Music 4th August 2025  in every loving Memory of Kishore Kumar Ganguly on his 96th Birth anniversary Kalakaattu Kavirayar

Bee the Flute

Image
  Bee is ringing in ears Bee is drilling in shears Be ing there in Tears Be ing there for Years Nothing until I was rooted then she came in I am fluted Nada is routed Ananda is unlimited Kalakaattu Kavirayar 30th June 2025 This poem is aimed at describing the forest life where the first bamboo was made the first flute by a bee. Until that moment, Nothing could enter the bamboo until it is rooted to earth. Bamboo was full of Nothingness, whereas when the bee drilled holes for it to live in, fresh air , wind blowed in. Then the bamboo was completely filled with that breeze and a melifluous music came out of that Bamboo as it became a flute. This form of nature is worshipped as Srividya, an act of nature as divinity.