Demon to Tree to Peacock
அசுரன் மரமானதால் மயிலாகினான்
பாரதத்தில் பல தெய்வங்களின் திருவிளையாடல்கள் பற்றி பல புராணங்கள் விவரிக்கின்றன. அது தீபாவளி பண்டிகை என்றால் அதில் நரகாசுரன் என்ற அரக்கனை அவனை தாய் பூமா தேவியின் அவதாரமான சத்ய பாமா கொல்வதால் கொண்டாடப்படுவது என்றும் , விஜய தசமி என்றால் அதில் இராமன் இராவணனை கொன்றான் அல்லது துர்க்கை அரக்கனை கொன்றதால் கொண்டாடப்பட்ட ஒரு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
ஆனால் திருசெந்தூரில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி - இன்று ( 9 நவ 2021) சுக்ல பக்ஷ சஷ்டி ( அமாவாசை முடிந்ததில் இருந்து ஆறாவது நாள் ) ஒரு சிறப்பு அம்சத்தை கொண்டுள்ளது.
காசியப முனிவரின் மகனான சூரபத்மன், தன் தவ வலிமையினால் அடைந்த தவ சித்துகளை பிற உயிர்களுக்கு தீங்கிழைக்க பயன்படுத்தியதால் அனைத்து உயிரினங்களும் முருக பெருமானிடம் வேண்டுகோள் விடுத்தன.
அதன் பொருட்டு போர் களத்திற்கு வந்த முருகனை அசுர படைகள் பல விதங்களில் எதிர்கின்றன. அனைத்து அசுரர்களும் முருகனின் பேராற்றலால் மடிந்து போகிறார்கள்.
ஆனால் அரக்கர்களின் தலைவன் கடைசியாக போருக்கு வரும் போது தன் மாய சக்தியால் பல உருவங்களை எடுக்கிறார். போர் கடுமையாக நடக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் தன்னை முருகனிடமிருந்து காத்துக் கொள்ள மரமாகி நிற்கிறார். இது வரை அந்த அரக்கரிடம் இருந்த போர் குணம் முற்றிலும் மாறி ஒரு தவ நிலை துறவுத் தன்மை அடைகிறார். அவர் முருகனின் அருட்பெருஞ் சக்தி தன்மையை உணர்கிறார். தன் ஆணவம் என்ற மலத்தன்மை நீங்க பெற்று மரமானவுடன் மலர் போல் மலர்கிறார். இந்த தன்மையில் முருகப்பெருமானும் அவருக்கு அருள் புரிந்து தனது மயில் வாகனமாக தனது கொடியில் சேவலாக ஏற்கிறார்.
இந்திய புராணங்களில் நடந்த நிகழ்வுகளில் ஸ்தூல காரணம் ( பரு உடலால் உணரக்கூடியது) சூக்ஷம ( சூக்கும) காரணம் ( ஆழ்நிலை தவத்தினால் உணரக் கூடிய ) சொல்லப்படுகிறது.
இன்று கந்த சட்டி நாம் இன்றைய கலியுகத்தில் அனைவராலும் எளிதாக உணரக்கூடியது மரத் தன்மையே ஆகும். இதற்கு மரங்களுக்கு அடி அமர்ந்து இருந்தாலே நமது மனதின் சலனங்கள் நீங்கி ஒரு அமைதி நிலை அடைவதை உணரலாம்.
சூரபத்மனை போன்று நமது மனங்களில் எழும் அரக்க / அசுர தன்மை நீங்க நமது ஆழ்நிலையில் இருக்கும் மரத்தின் தன்மையை வெளிக் கொண்டு வந்தால் பரமானந்தத்தில் நாம் மயில் மேல் அமர்ந்த முருகனை போல் எப்போதும் உணர்ந்து இறைமையில் முழுமை அடையலாம் என்பதே இந்த சூர சம்ஹாரம் விழா வருடா வருட அனைவருக்கும் நமது பிறவி நோக்கத்தை நினைவூட்ட விழாவாக கொண்டாடப்படுகிறது.
கல் ஆலமரத்தினையே நமது முன்னோர்கள் குரு பகவானாக வழிப்பட்டனர். ஒவ்வொரு கோவிலிலும் தல மரங்களையே முக்கியமான வழிப்பாடாக , இயற்கையின் பரிமானத்தை உணர்வதற்கு மரத்தினடி தவத்தினை பரிந்துரைத்தார்கள்.
இதனை வாக்கியங்களாக வள வள என்று எழுதாமல் ஒரு கவிதை வடிவில் கொடுக்க களக்காட்டு கவிராயரின் சிறு முயற்சி இதோ :
களக்காட்டு கவிராயர் 2021

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ReplyDeleteசக்தி வேல் முருகனுக்கு அரோகரா
கந்த சஷ்டி வாழ்த்துக்கள்.
நன்றி அய்யா
Deleteநன்றி அய்யா
ReplyDeleteKandha sashti story is explained very well in the context of tree and it's meditative 🧘♀️ nature. Kavita is a way ahead. Super. Congrats.
ReplyDeleteVery nice poetry
ReplyDeletethank you
Deleteவெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ReplyDeleteவெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
DeleteREPLYDELETE