Merry Chrishna
கிருஷ்து
மயக்கும் வண்டிசை
மலர்ந்த மனங்கள்
மறைந்த பகைகள்
விரிந்த கைகள்
யுத்த கீதை ( கேட்டே )
வியந்த சிந்தை
இதுவே எந்தை ( என்றது )
யாதுமாகி நின்ற யாதவனும்
சூதறியா சூசையனும்
மாரியிடத்தில் மாறியவனும்
மேரியில் உதித்தவனும்
அனைத்திலும் மாய கண்ணனடா
அறைந்தாலும் காட்டுவது மறு கன்னமடா
விரிவடைய விரும்பும் மனமெல்லாம்
வானம் பொழியும் மழையெல்லாம்
இணைக்கும் நம்மையெல்லாம்.
ஜெருசேலத்தில் பிறந்த ஜோஷுவாவிற்கு அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு பெருக்கெடுத்தது.
அனைத்து உயிர்களையும் இணைக்கும் அந்த அன்பு என்னும் உள்ளம் மலர்ச்சியை உணர கிருஷ்ணனின்
அன்பு தத்துவம் கவர்ந்து அவரை சிந்து நதியின் கீழ் பகுதிக்கு அழைத்து வந்தது. “கிருஷ்ண”
என்னும் அன்பின் மகிமையில் தோய்ந்த அந்த மகா யோகி தான் உணர்ந்ததை தன் மக்களும் உணர
அந்த தத்துவத்தை தன் ஹிப்ரூ மொழியில் “கிருஷ்து” என்றழைக்க. சிந்து நாகரீகத்தை தன்
மொழியில் விளக்க , அதன் பின் அனைத்து உயிர்களிடத்தும் அன்புக் காட்டிய அந்த இளைஞன்
“ஜோஷுவா கிருஷ்து “ என்று அழைக்கப்படலானார்.
அவர் பின்பு தமது ஆசிரமத்தை இன்றைய காஷ்மிரத்தில் அமைத்து ரோசபிள் என்ற
இடத்தில் அவரது கல்லறை இருப்பதாக “ரோசபிள் லைன்” என்ற புத்தகத்தில் அஷ்வின் ஷாங்கி
என்ற எழுத்தாளர் எழுதியுள்ளார். இதை போலவே “க்ரைஸ்ட் ஆஃப் காஷ்மீரிஸ் ” என்ற புத்தகத்தில்
“ஆனந்த கிருஷ்ணா ” என்ற இந்தோனேசியாவில் வாழும் ஆன்மீகவாதி யேசுவின் பயணத்தை குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி விவேகானந்தரும் யேசுநாதரை காஷ்மீரத்தில் ஞானம் தேடிய ஒரு மகா ஞானியாக வணங்குகிறார்.
| காஷ்மீரில் இதுவே இயேசுவின் கல்லறையாக கருதப்படுகிறது |
அன்பின் பேரொளியாம் யேசுவின் அனைத்து உயிர்களின் மீதான அன்பை நாமும் பகிர்ந்து மகிழ்வோம். கிறிஸ்து அல்லது கிருஷ்ண என்பதை ஒரு மதமாக சுருக்காமல் அனைத்து உயிர்களையும் இணைக்கும் ஒரு இணைப்பு சக்தியாக உணர்ந்து வாழ்வோம். இறைவனை எத்தனை பெயர் வைத்து வேண்டுமானாலும் நாம் அழைக்கலாம். நான் அழைக்கும் பெயரால் நான் நம்பும் முறையில் தான் அனைவரும் வணங்க வேண்டும் என்று நாம் சுருங்கக் கூடாது.
யேசுவின் விரிந்த கைகள் அனைவரையும் அவர் அவர் இயற்கை நியதிப்படியே அவ்வாறே ஏற்க வேண்டும் என்பதன் உருவக கோட்பாடாகும். “கிறிஸ்துமஸ்” என்பது நமது
“மன உணர்வுகளின்
விரிவாக்க தினமாக” கொண்டாடுவோம். இன்றைய பூமி
வாழ்க்கையில் 800 கோடி மனிதர்கள் மட்டுமல்ல பல்லாயிர கணக்கான கோடி உயிர்களும் வாழும்
ஒரு உன்னத தலமாகும். அதனால் இதில் பல்லாயிரக்கணக்கான கோடி மதங்கள் இருக்கின்றன அதில்
பல வேறுபாடுகள் உருவத்தில் இருக்கலாம் ஆனால் உள்ளத்து அளவில் ஒன்றே. வாருங்கள் விரிந்து வாழ்வோம். இந்த கவிதையில் “கிருஷ்ண” என்கிற சம்ஸ்கிருத சொல்லின்
நேர் பொருள் “கருத்த நிறமுடைய” என்ற பொருளேயாகும். தமிழ் நாட்டிலும் இந்த கறுத்த தோல்
நிறமுடைய மாடு மேய்த்த சிறுவனை “கருபண்ணசாமி”யாகவும் அவனிடத்தில் இடம் மாறி கரு மாறி
பிறந்தாள் என்பதால் அவளை பெண் தெய்வமாக “கருமாரி” ஆகவும் இன்றளவிற்கும் பல கிராமங்களில்
தெய்வமாக வழிப்படுகின்றனர். பல கிராமங்களில் நடக்கும் கூத்து நாடகங்களிலும் இந்த வழக்கியலை
காணலாம்.
களக்காட்டு கவிராயர் 25.12.2021



நல்லது. இப்படியும் கருத்தோட்டம் வேண்டியதுதானே!
ReplyDeleteThis is a fact practically experienced when my European friends call my name
DeleteAnne Sivam. Nice comparison between Christ and Krishna
ReplyDeletesimilarity is obvious and reason for name itself
Delete👍👍
ReplyDelete