No stains on You Gopala
குறையொன்றுமில்லை கோபாலா !!
ராஜ கோபாலா !!!
வெளுத்தபாலே
விஷமான பின்னாலே !
உளுத்ததெல்லாம்
அரசியல் பேசும் முன்னாலே !
வெளுத்த உப்பை
எடுத்தாய் நின் கையாலே !
( https://en.wikipedia.org/wiki/Vedaranyam_March )
வெள்ளையன்
சட்டத்தை வெளுத்தெல்லாம் நின் வாயாலே !
தொடாதவரை
கூட்டிச் சென்றாய் மலை மேலே
( https://hindutemplefacts.wordpress.com/tag/kurai-ondrum-illai/ )
காந்தியையும்
கண்டித்தாய் மனசாட்சி போலே
பாரதியை உயர்த்திவிட்டாய்
அகக்காட்சியாலே
ஈரோட்டு ஆசாமி
தறிகெட்டு பேசிடினும்
முறைகெட்டு
போன பின்பும்
ராம சாமியை வசைபாட சென்றிடுனும்
நட்பால் நல்பண்பு காத்த மரமே !
முதிர்ந்த நெல்லிகனிபோல்
உன் மூதுரைகள்
முன்னே கசந்திடினும்
என்றென்றும்
தித்தித்த
சேலத்து மாம்பழமே
நேருவிற்கு நேர் எதிரே
நேர்வழி காட்டிடவேசுதந்திராவை
கண்டெடுத்தாய்
இந்திராவை
கண்டவுடன்
கழகத்தையும்
ஆதரித்தாய்
வீண்பழிக்கு
ஆளாகி
வெட்டிபேச்சுக்கு
இரையாகி
சுட்டிபேசுவோர்
கதையாகி
நின்றாலும்
நிற்காமல்
கொட்டும்
மழையிலும்
குடி கெடுக்கும்
குடி தடுக்க
குறையொன்றுமில்லை
கோபாலா
!!
இறந்த தலைவருக்கும்
உடலை உன்
ஹாலில் ( இராஜாஜி ஹால், சென்னை)
வைத்தால்
தான்
மரியாதை கிடைக்குதப்பா
!!!
பழி போட பலர்
இருக்க
புகழ் பாட
சிலர் மட்டும்
என்ற குறை
மட்டும்
எதற்கப்பா
???
இதுவே என்
இரங்கற்பா.
கறை வேட்டிகள்
பல
உன் முற்றத்தில்
வந்து
தோய்த்ததனால்
கறை வெளுத்ததப்பா
இது ‘கரை”யின்
தப்பா ??
கங்கையின்
மைந்தனைப் போல்
சக்கரவர்த்தி
திருமகனே
ராஜகோபால
சாரி யார்?
என்று எதிர்காலமும்
அறிந்திடவே
எழுதிய பாட்டப்பா
'குறையொன்றுமில்லை'
உன் தேன்மதுர
பாட்டப்பா
களக்காட்டு கவிராயர்
சக்கரவர்த்தி
இராஜகோபாலாச்சாரியார்(இராஜாஜி ) அவர்களின் 143 வது ( 9 டிச 1878 - 25 டிச 1972 ) பிறந்த நாளாம் 9 டிசம்பர் 2021 அன்று
எழுத நினைத்து 12.12.21 அன்று எழுதி முடித்தது. காந்தியை காட்டிலும் காந்தியத்தை அதிகம் பின்பற்றியவர். காந்தியின் சம்பந்தி மற்றும் பல காந்தி ஆசிரமங்களை தமிழ்நாட்டில் உருவாக்கியவர். பெண் விடுதலை, விதவை மறுமணம், பட்டியல் இனத்தவரின் ஆலய நுழைவு , மது ஒழிப்பு என்ற பல முன்மாதிரியான முயற்சிகளால் வரலாற்றில் தடம் பதித்தவர். மாற்று கருத்துக்களுக்கு அஞ்சாமல் தன் கருத்துக்களை நிலைநாட்டியவர். தமிழ்நாட்டில் பெற்றோர்களின் மூலம் பிள்ளைகள் நல்ல கல்வி கற்க முடியும், பெற்றோர்களே பிள்ளைகளின் முதல் ஆசிரியர் என்று முன் மொழிந்து திட்டத்தை முன் வைத்தவர். அந்த திட்டத்தை தவறான அரசியல் புரிதல்களால் நடைமுறைப்படுத்தாமல் போனதால் பாரம்பரிய நெசவு முறை, கைவினை பொருட்கள் தயாரிப்பு, பாரம்பரிய சமையல் முறைகள், கருவிகள் தயாரிக்க இயலாமல் பாரம்பரிய கலைகள் தொடர முடியாமல் போனது.
Your poetic tribute to Rajaji is a well deserved one
ReplyDeleteThank you Malathi ji
DeleteArumai Kalakkattu Kavingarey
ReplyDeleteVaarthai jalathil vazhthuppavai
varainthitteer!
Vazhga valamudan!
thank you anna.
Delete