Sound Light Delight in Abundance - Vallalar
ஒளியும்
ஒளியும்
குகைதான்
உடலோ !!!
ஊனுடம்பே
ஆலயம்
என்பதன்
மூலமோ !!
மறையும்
மறையும்
ஓதும்
உணர்வோ
!!!
ஓலியாத
மனமும்
ஒளியாத
தவமும்
ஈர்க்கும்
குணமோ
!!!
ஓலிதான்
குகமோ
ஒளிதான்
சிவமோ
!!!
ஓலியும்
ஒளியும்
இணைந்தால்
மழையோ
!!!
அருளும்
மழைதான்
ஆனந்த
ஜீவகாருண்யமோ
!!!
வாடும் பயிரை
வாடாமல் காக்கும்
இயற்கையின்
ஒழுங்கோ
!!!
அடங்கா
ஒளியை
அடைக்கதான்
வெண்துணியோ
!!!!
வள்ளலே
விரிந்தபின்
அடக்கும்
கடையும்
கொள்வதும்
எளிதோ
????
தையில்
பொங்கலோ
ஒளியின்
பொங்கலோ
பூசத்தில்
பூஜிக்கின்றேன்
அருட்பெருஞ் ஜோதியே !!!
வள்ளல் ஜோதி
இராமலிங்க சுவாமிகள் எந்த ஒரு கூட்டிற்குள்ளும் அடைக்க முடியாத எல்லையற்ற ஒளி உருவமாக
உலகத்தில் ஒளியின் சாத்தியத்தை உலகத்தவருக்கு உணர்த்திய நாள் தை பூசம்.
அவர் ஒரு
வெள்ளைதுணி கொண்டு தன் தலை வரை முக்காடிட்டு அந்த ஒளி உடலை மறைத்து இந்த உலகில் பிறந்த
பிறக்கப் போகின்ற அனைத்து உயிர்களுக்கும் பிரபஞ்சத்தின் ஒளித்தன்மையை உணர வெளிப்படுத்த
வாய்ப்புள்ளது அதற்கான வழியையும் வள்ளலார் அனைவருக்கும் வழங்கியுள்ளார்.
அந்த எல்லையற்ற
பிரபஞ்ச பேரொளி ஒரு வரம்பிற்குள் நுழைந்து ஒரு உடலெனும் என்னும் எல்லைகுள் சிக்கியபின்
அதிலிருந்து மீண்டு அந்த எல்லையற்ற அருட்பெருஞ்ஜோதி தன்மையை மீண்டும் உணரவே ஒவ்வொரு
பிறவியின் பிறவி நோக்கம் என்கிறார்.
சைவசித்தாந்தத்தின்
படியும் உயிர்கள் அனைத்தும் ஒலியிலிருந்து
தான் பிறக்கின்றன. இந்த தத்துவத்தை உணர்த்த முருகன் என்ற கடவுளின் திருவின் உருவிற்கு குகன் என்ற பெயர் வழங்கப்படுகிறது.
பொதுவாக குகைகளில் என்ன இருக்கிறது என்று வெளியில் இருப்பவருக்கு தெரியாது அதனாலேயே
தமிழ் சம்ஸ்கிருதம் என்று இரண்டு மொழிகளிலும் குக, குஹ என்ற சொற்கள் இரகசியம் என்று பொருள்படுகிறது. இதனாலேயே தன் தந்தையாருக்கு பிரபஞ்சத்தின் மூல தத்துவத்தை
உணர்த்தியவர் குகன் – சுவாமி நாதன் என்று அழைக்கப் பெறுகிறார். இதையே சித்தர்கள் என்னும்
மெய்ஞானியர் பலரும் உணர பல் வேறு கோயில்களை எழுப்பி இது உயிர்கள் உணர வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இது போல் ‘ஓளி”யின் தத்துவத்தை ‘சிவம்” என்ற தன்மையாய்
விளக்குகின்றனர். இதனை நவீன கால விஞ்ஞானிகளும்
பிரபஞ்ச மூலத் தத்துவங்கள் அனைத்தும் ஒலி ஒளி தன்மையிலிருந்து வெளிப்பட்டன என்கின்றனர்.
பாரம்பரிய இந்தியர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாய் பிரபஞ்ச பேராற்றலை தங்கள் அனுபவத்தால்
உணர்ந்து அதனை ஒலி ரூபத்தில் பிரபஞ்ச வான் வெளியில் பதிந்து அதற்கு “வேதம்” என்று அழைத்துள்ளனர்.
இத்தகைய உயர்ந்த
ஞான தத்துவங்கள் பலவும் பல்லாயிரகணக்கான ஆண்டுகள் முன்பே மனித பேராற்றல் உணர்ந்தாலும்
பல தலைமுறைகளுக்கும் அவ்வப்போது சில ஞானியர் வந்து விளக்கம் அளிக்க வேண்டி வருகிறது.
மக்கள் இதற்குள் மூலத்தத்துவ வழிமூறைகளை மறந்து வெறும் சடங்குகளை புரியாமல் செய்ய துவங்க திருமூலர், மாணிக்கவாசகர், வள்ளலார்
போன்ற மெய் உணர் ஞானியர் தோன்றி அந்தந்த காலகட்டத்திற்கேற்ப விழிப்புணர்ச்சி ஊட்ட வழிக்
காட்டி சென்றுள்ளனர்.
அதுவும் வள்ளல்
என்று போற்றப்பட்ட இராமலிங்க அடிகளார் வாழ்ந்து காட்டி வழிக்காட்டுதலே சிறந்தது என்பதால், தான்
உணர்ந்து சத்திய தத்துவங்களை “திருவரூட்பா” “தெய்வமணிமாலை” போன்ற பாடல்களாக நமக்கு
வழிக்காட்ட தந்துள்ளார்.
“கடை விரித்தேன்
கொள்வாரில்லை” என்ற வள்ளலார் கூற்றும் பெரும்பாலும் தவறாகவே பலரால் விளக்கமளிக்கபடுகிறது.
“ஓளி என்னும்
கடையாய் நான் விரிகிறேன் , அப்படி விரிதல் தன்மையை அடையும் போது அதனை அடைக்கக் கூடிய
(கொள்ளக் கூடிய ) பாத்திரம் , கூடு, அறை என்ற எந்த அளவுக்கோலிற்கும் அடங்காத ஆற்றல்
கொண்டது “ என்று விவரிப்பதாகவே தோன்றுகிறது.
தை பூசம்
என்னும் விரிவுத் திருநாளில் கூடுகளற்ற பிரபஞ்ச தன்மையை உணர முயல்வதே இந்தத் திருநாளில்
நாம் அவசியம் செய்ய வேண்டிய செயலாகும். நமது ஒலி, ஒளி மூலத்தை உணர்வோம்.
அருட்பெருஞ்ஜோதி
! அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை
! அருட்பெருஞ்ஜோதி
களக்காட்டு
கவிராயர் கிருஷ்ண குமார்.

Hey. You're trying to Crack the essence of existence through Vallalar. Great going. God bless 🙌
ReplyDeleteதைப்பூசத் திருநாளில் ஜோதியில் அருட்ஜோதியெனக் கலந்த மகானைப் போற்றுவோம். வணங்குவோம்.
ReplyDeleteமிக சிறப்பாக உள்ளது
ReplyDelete