Kannadasan 95

 கண்ணதாசன் 95


செந்தமிழ் தேன் மொழியால்

பாட்டும் நீயே

பாவமும் நீயே

பாடிய உன்னையே

பாட வந்தேனே !!!

 

விசுவின் இசையும்

தேவனின் (மகா ) மெட்டும்

மனதில் பதியும்

உன் துள்ளல் பாட்டாலே

 

நச்சுண்ட ஈசனும்

நடிக நாத்திகர்

மத்தியிலே

நடமாட வைத்தானே

 

ஓடும் ரயிலின்

இருப்பு பாதையில்

கழக போதையில்

தலை வைக்க

வைத்தானே

 

ஓடா ரயிலும்

தண்டவாள தலையும்

வண்டவாளம் அனைத்தையும்

இசைப்பட சொன்னானே

 

பட்டினத்தாரையும்

பகவத் கீதையும்

பாமர இசையில்

படம்பிடித்து சொன்னானே

 

நாட்டின் கோட்டையிலே

நிதி சேர்க்கும் வேட்கையிலே

அடுக்கு மொழி பேசிய

அற்பர்கள் மத்தியிலே

 

நாட்டுக்கோட்டையிலே

நல்லறத்தை காட்டிடவே

பாட்டுக்கோட்டையிலே

பிறவியை புட்டு வைத்தவனே

 

வைரத்திற்கும் முத்திற்கும்

பட்டம் தேடும் தலையிருக்கும்

சிறிஞர்கள் மத்தியிலே

கிடைக்காத அறிய முத்தையா

தமிழின் சொத்து அய்யா !!

 

உனக்கு பிறகு அனைத்தும்

பணத்திற்கும் பதவிக்கும்

பட்டத்திற்கும் பகட்டிற்கும்

பாட்டு எழுதும்

பல்லிளிக்கும் சொத்தையா

 

உன் படைப்புகளையும்

வியக்கின்றேன்

உன்னை படைத்தவனையும்

வியக்கின்றேன்

பட்டம் தர தேடுகின்றேன்

எங்கே அந்த நாயகன் ??

 

காடுகள் மலைகள்

தேவனின் கலைகள்

அனைத்திலும் உன்னை

நான் காண்கின்றேன்

 

ஆயர்பாடியில் அந்த

ஆநிரை மேய்த்தவனின்

ஆ நிறையப் பெற்ற

அக்கோபியரில் ஒருத்தியோ நீ

மூங்கில்களை

புல்லாங்குழலாக்கும்

வண்டோ நீ

பூத்தொடுத்து

மணந்த கோதையோ நீ

பாத்தொடுத்து

மணந்த பேதையோ நீ


யோனி பல கண்டவனும்

ஞானியாகலாம் என்று

ஊருக்கு உணர்த்திய

உத்தமன் தான் நீ

 

உள்ளத்தில் நல்ல உள்ளம்

உறங்காது என்பதால்

களைமிகு காட்டில்

கறுத்த சிறுவன்

காத்திருக்கின்றான்.


களக்காட்டு கவிராயர் 

கிருஷ்ணகுமார் சத்தியவாகீஸ்வரன்

Comments

  1. ஆகா ஆகா கவித கவித அடேயப்பா கவியரசரின் உருவரைந்த உண்மைக் கவி- நீரே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

GU RU Purnima - Dispelling Darkness to Light

A Pedestrian Paramacharya

Sindoor - door of sins பார் அதி புதுமை பெண்