Hail The Dark skinned Cowherd boy

கருத்த நிற மாடு மேய்க்கும் சிறுவனை போற்றுவோம்

ka

Penance under the tree brings out the Divinity in fullest form


"கானக் குயில் குரலில்
கருத் அமைந்திடினும்
உன் கான குழலோசை மயக்குதே

கருத்த குழலோடு நிறத்த மயிலிற
கிறுக்கி அமைத்த திறத்திலே
கான மயிலாடும் மோன குயில் பாடும்
நீல நதியோடும் வனத்திலே"
( Please listen to the song here https://www.youtube.com/watch?v=Zh43DFtbFhs )

யார் அந்த கிருஷ்ணன் ???
கருத்த தோல் நிறத்திற்காக
மனிதர்களால் பழிக்கப்பட்டு
மிருகங்களால் மிகவும் நேசிக்கப்பட்ட
ஓர் உன்னத பேராற்றல்

அந்த உன்னத அன்பின் வடிவத்தை
உணர நீல நிறத்தில் நதியோடும்
கானகத்தில் கானங்கள் இசைக்கும்
மூங்கில் மரங்களும் அதில் துளையிடும்
வண்டினங்களும் கிளையில் அமரந்து 
பரமானந்தத்தில் லயிக்கும் பறவைகளும்
ஊர்வனவும் திரிவனவும் துள்ளி குதித்து 
மகிழும் நிகழ்வே கிருஷ்ணன் 
என்கிறார் கவிதைகள் ஊற்றெடுக்கும்
காட்டின் வேங்கட கவி.
( ஊத்துக்காடு வேங்கட சுப்பய்யர் )

மலையை சுண்டு விரலில் தூக்கி
மலைகளை வணங்கினால்
இயற்கை என்னும் இறைமையை
உணர முடியும் என்று உணர்த்தவே
"பச்சை மாமலை போல் மேனி"
என்று மாதவனை பாடினாரோ
தொண்டர்களுக்கும் அடியவரான ஆழ்வார்.

கிருஷ்ண என்ற தத்துவத்தை உணர இயற்கையின்
பேராற்றலை அதன் உன்னதத்தை போற்றி பாதுகாப்பதன் 
மூலமாக உணர்வோம்.


Who is Krishna ?
What is Krishna ?
Where is Krishna ?
Which is Krishna ?
The One, whose mere presence brings bliss to every being. It is that mellifluous music being played by that bamboo tree, where the bees drilled the holes for the wind to flow through in a dense forest, where every form of living beings chirping along with the river flowing down the hills is what felt by the Oothukadu Venkata Kavi in his efforts to express the divinity he experienced through the innumerable songs flowed through him.

Worship thy hills, the trees and river flowing on them said the Dark skin colored cow herd boy by lifting a hill on his little finger indicating it is the nature we have to worship and protect. So it is natural for the Azhwar ( Thondaradi Podi azhwar is One of the 12 Azhwars of Vaishnava Philosophy ) to describe the Perumal as the one having a body like a Green Mountain.

Though most of the Humans could see only the dark skin and Mock him as "Krishna" but it is the animals and all living beings as they perceived the God within as "The Krishna",which is functioning from every being. 

 Hail the Krishna in You.  
Don't fail to recognize the all pervading  love for every creature.

களக்காட்டு கவிராயர் 19.8.2022

Kalakkattu Kavirayar 19 Aug 2022

Comments

Post a Comment

Popular posts from this blog

GU RU Purnima - Dispelling Darkness to Light

A Pedestrian Paramacharya

Sindoor - door of sins பார் அதி புதுமை பெண்