இளைய ராஜா மாணிக்க வாசகருக்கு எவ்வளவு ராயல்டி கொடுத்தார் ? How Much Royalty did Ilayaraja pay to Manikka Vasagar ??


 இளைய ராஜா மாணிக்கவாசகருக்கு

 எவ்வளவு ராயல்டி கொடுத்தார் ?

 How Much Royalty did Ilayaraja pay to Manikka Vasagar ??

ண்ணைபுரத்து 

பண் இசைப்பவரே 

பாட்டுக்கு

பட்டா கேட்பது ஏனோ??


"ப்பனும் ஆத்தாளும்

சேராம போனா நீயும்

தான் பொறக்க முடியுமா?"

பாடிய நீயே பாட்டின் தந்தையான

பாடலாசிரியரை மறைக்கலாமோ??


"ள்ளம் சிலர் உள்ளம் என

ஏன் படைத்தான் ஆண்டவன் 

பட்டம் தர தேடுகின்றேன் 

எங்கே அந்த நாயகன்"

என உனது அருகில்

இருந்து தேடியவனை

மறக்க மனம் கூடுதில்லையே 



"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று உருகி மருகி சிம்பொனி அமைத்த நீர் அந்த மாணிக்க வாசகருக்கு

கொடுத்த ராயல்டி தான் என்ன??


" நான் யார்?" என்று

தன்னை தொலைத்தவனை

அருணையின் அடியில்

கருணையின் வடிவில்

நிதம் தொழும் நீயே 


கோவணம் வரை துறந்ததால்

மணக்கின்றான் ரமணன் என்று 

நம்ப மறப்பதேன் 

"நாயகனின்" நாயகனே


ட்டை பட்டையாய் வைரமும்

கொண்டு வந்து கூடவே

பனை ஓலையில் ஒரு பாட்டு

" காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" படித்தவுடன் 

பட்டென்று பட்டாக்களை 

போட்டு விட்டு செங்கரும்பை

கையில் ஏந்தி

பட்டி போல் அலைந்து

பாடாத பாட்டெல்லாம்

பாடிவிட்டார்

பட்டினத்தார் 


பாட்டினத்தாரே!!!

பாட்டால் இனித்தவரே

பாட்டிற்கு பணம்

பெற்ற பின்பும்

பிட்டிற்கு தானே மண்

சுமந்தாய் என்று 

பிரம்படி தான் கிடைக்கும்

என்று அறியாத சிறுவனா நீ ??

உன் மேல் விழும் அடி அனைத்தும்

உன் அடியவர் மேலும் விழுகிறது 

என்று உணராத சிவனோ நீ ? 


" ம்பாட்டு எம்பாட்டு என்று பாடாத நீ நிப்பாட்டு" என்று நீ உன் குரலில் பாடிய "உம்பாட்டு" என்றும் எங்கள் மனங்களில் நீங்கா இடம் பிடிக்கும்.


" நான் நிரந்தரமானவன் அழிவதில்லை " என்ற கண்ணதாசனை போல் உனக்கும் எங்கள் மனங்களின் அரியாசனத்தில் அந்த மகாராஜனின் அருகில் இளைய ராஜாவாக அமர்த்திவிட்டோம். 

இது " எந்த கோர்ட்டுக்கு போனாலும் கிடைக்காது அந்த கோட்டைக்கு போனால் திரும்பாது  !!"" 


னனி ஜனனி என்று பாடிய நீ

அவள் வாசிக்கும் ஹார்மோனியம் நீ

அசையா மலையில் உதிக்கும் அருவி

அத்தி மரத்தில் குதிக்கும் குருவி

வண்டு துளைக்கும் ஒசைக்கருவி

அசையும் அசைவில் அனைத்திலும்

ஜனனி ஜனனி அவளே ஜனனி



அன்புடன்


களக்காட்டு கவிராயர்

கிருஷ்ண குமார்

சத்திய வாகீஸ்வரன் 

5.5.2024

Comments

Post a Comment

Popular posts from this blog

GU RU Purnima - Dispelling Darkness to Light

A Pedestrian Paramacharya

Sindoor - door of sins பார் அதி புதுமை பெண்