அமரன் 2008 AMARAN 2008

 

இன்றைய பொங்கலுக்கு விஜய் டிவியில் "அமரன்" படம் பார்த்து "மேஜர் முகுந்த் வரதராஜன்" அவர்களின் வீர தீர சாகசங்களையும் அவரின் தியாகத்தையும் பார்த்து மெய் சிலிர்க்க வைத்தது. 

எத்தனை இலட்சம் ராணுவ வீரர்களின் தியாகத்தால் நாம் இங்கே வீட்டில் மிக சொகுசாக உடகார்ந்து கொண்டு டிவி பார்க்க முடிகிறது என்பது நினைக்க உள்ளம் கனத்து விடுகிறது.

ஆனால்  பொது மக்களாகிய நாம் இந்த சுதந்திரத்தை பொறுப்பாக கையாள்கிறோமா என்று கேட்க தோன்றுகிறது. இராணுவ வீரர்களின் குடும்பங்களும் எத்தனை தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கிறது என்று மலைக்க வைக்கிறது. 

இது போல் ஒரு அனுபவம் நவமபர் 2008 ல் வந்தது. அப்போது சகோதரியை பார்க்க மும்பை சென்றிருந்தோம். GATE WAY OF INDIA, Taj Hotel எல்லாவற்றையும் அருகில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதே மாதத்தின் கடைசியில் மும்பையை பாகிஸ்தானின் தீவிரவாதிகள் தாக்கிய போது, அதில் தாஜ் ஓட்டலில் பிணை கைதிகளை மீட்கும் வீர செயலில் தன் இன் உடல் நீத்த மேஜர். சந்தீப் உன்னிகிருஷ்ணன் அவர்களின் தீர சாகசத்தை உலகமே போற்றியது.

நாம் பார்த்த இடத்திலேயே ஒரு தீவிரவாத தாக்குதல் நடந்ததே அதிர்ச்சியாக இருந்தது. அதனை கேள்வி பட்ட உடன் எழதிய கவிதை File லில் கிடைத்தது.


இன்னும் எண்ணற்ற வீரர்கள் குளிரிலும், மழையிலும், வெயிலிலும் தங்கள் குடும்பங்களை விட்டு சுக துக்கங்களை மறந்து பொது மக்களின் பாதுகாப்பாக நின்று கொண்டே இருக்கிறார்கள், மடிந்து வீழ்கிறார்கள். 

இதற்கெல்லாம் என்ன தீர்வு ? ஏன் இந்த உலகில் சதா சர்வ காலமும் போர் முழங்கி கொண்டே இருக்க வேண்டும் ? பிரபஞ்சம் ஏன் இந்த மாதிரி மனிதர்கள், மிருகங்கள் எல்லா உயிர்களுக்கும் சண்டையிட்டு கொண்டே இருக்கும் படி படைக்கிறது ?  

இன்று உத்திர ப்ரதேசம் பிரயாக் ராஜில் துவங்கி இருக்கும் "கும்ப மேளா" விற்கு திரிவேணி சங்கமத்தில் குளிக்க இமய மலையில் கடுங்குளிரிலும் தவம் இயற்றும் துறவிகள் பலர் இறங்கி உள்ளனர்.

அவர்கள் எல்லோரிடமும் மிகவும் தாழ்மையுடன் 'உலகில் சகல் ஜீவராசிகளும்" அன்போடு ஒத்திசைந்து வாழ " தவமியற்ற" அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த "அமரன்" திரைபடத்தில் மகாகவி பாரதியின் "அச்சமில்லை அச்சமில்லை" பாடலை பாடியிருந்தார்கள். அதே பாரதியும் " ஆதலினால் காதல் செய்வீர் மானிடரே " என்றும் பாடியுள்ளார். 

இன்னும் உலகின் அற்புதங்களை வர்ணிக்க எண்ணற்ற கவிதைகள் தேவைப்படுகின்றன. அற்புதமான நீர் வளத்தில் அனைத்து உயிர்களும் அன்போடு கவிதையாய் வாழ வேண்டும் என்பதையே 'பெரிதினும் பெரிது கேள்" என்ற பாரதியின் ஆணைகிணங்க கேட்கிறேன்.

களக்காட்டு கவிராயர் 14 ஜனவரி 2025

Kalakkaattu Kavirayar 14 Jan 2025

Comments

Post a Comment

Popular posts from this blog

GU RU Purnima - Dispelling Darkness to Light

A Pedestrian Paramacharya

Sindoor - door of sins பார் அதி புதுமை பெண்