Sujatha Re-born மீண்டும் சுஜாதா

 

நேற்று சென்னை புத்தக கண்காட்சி 2025 நண்பருக்காக எங்களின் அபிமான எழுத்தாளர் திரு சுஜாதா வின் "டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு" நாடகம் பல பதிப்பகங்களிலும் தேடி கிழக்கு பதிப்பகத்தில் கண்டு பிடித்து வாங்கி கொண்டு போய் பரிசளித்தேன். 

எல்லா காலகட்டத்தையும் தன் எழுத்துக்களால் அடைத்துள்ள ஒரு மாபெரும் விஞ்ஞானியும் மெய் ஞானியுமான ஒருவர் மீண்டும் வருவாரா? என்ற ஏக்கம். இந்த ஏக்கத்தை அவர் உடலை நீங்கிய 28 பிபரவரி 2008 ல் அன்றே எழுதிய அவர் வீட்டிற்கே சென்று அவர் மகனிடம் கொடுத்த கவிதை ஞாபகம் வந்தது. 

வாழ்க்கையில் தாம் சந்தித்த மனிதர்களை  தன் எழுத்துக்களால் படம் பிடித்ததோடு வரப் போகும் காலத்தில் வரப் போகும் மனிதர்களையும் இயந்திரங்களையும் முன்பே சொன்ன முற்றும் உணர்ந்த ஞானியாக நினைக்க தோன்றுகிறது. 

சமீபத்தில்  இன்றைய உலக மிகப் பெரும் பணக்காரரும் தொழிலதிபர் திரு எலான் மஸ்க், இந்தியா தேர்தல் முடிவுகள் எத்தனை விரைவாக வெளியிடுகிறார்கள் என்று ஆச்சர்யபட்டிருந்தார். அமெரிக்கர்கள் இந்தியர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். அந்த இந்தியன் திரு. ரங்கராஜன் ஆகிய சுஜாதா தான். 

இந்த "இந்தியன்" இருந்த போது - "எந்திரன்", "அன்னியன்" சுஜாதா வின் துணையால் மாயா ஜாலம் காட்டிய இயக்குனர் திரு ஷங்கர் , இப்பொது சமீபத்தில் வெளியான "GAME CHANGER" மற்றும் "இந்தியன் -2" விலும் சுஜாதாவை மிஸ் பண்ணிவிட்டார் என்று சமூக வலைதளத்தில் பலரும் அங்கலாய்கின்றனர்.

சமீபத்தில் எல் & டி தலைவர் திரு சுப்ப்ரமணியம் " 90 மணி நேர வாரத்தில் வேலை செய்ய வேண்டும்" என்று புயலை கிளப்பிய போதுக் கூட இவர் சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" நாவல் அதிகம் படித்து தனது ஊழியர்களையும் "எந்திரன்" களாக நினைக்க ஆரம்பித்துவிட்டாரா என்று புலம்பும் அளவிற்கு சுஜாதாவின் தாக்கம் இன்றும் தொடர்கிறது.


இந்த கவிதையில் அந்த ரங்கராஜனிடம் இந்த ரங்கராஜனை மீண்டும் வர வேண்டும் என்று கேட்டிருந்தோம். அரங்கனை எழுப்புவோம்,"ஸ்ரீரங்கத்து தேவதைகளை" துணைக்கு அழைத்து சுஜாதா மீண்டு வரச் செய்வோம்.

எல் & டி திரு சுப்பிரமணியம், இன்போசிஸ் திரு நாராயண மூர்த்தி இவர்களிடம் தொழில்நுடபத்தையும் இல்லற வாழ்க்கையும் எப்படி ஒரு சேர சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று திரு சுஜாதா விளக்கி புரிய வைத்து ஒரு "ஏ ஐ" ஹைக்கூ கவிதையும் தந்திருப்பார். டிரம்பை பற்றி சுஜாதா என்ன கமென்ட் அடித்திருபார் ? "மீண்டும் ஜீனோ" வந்தது, மீண்டு சுஜாதா வருவாரா ?



தாவிரவியல் விஞ்ஞானி
திரு ஸ்ரீகுமார்


களக்காட்டு கவிராயர்
Kalakkattu Kavirayar 13 Jan 2025



Comments

Popular posts from this blog

GU RU Purnima - Dispelling Darkness to Light

A Pedestrian Paramacharya

Sindoor - door of sins பார் அதி புதுமை பெண்