எது சிவம் ? What is sivam ?

எது சிவம் ?? 

                                                                      அற்புதமான

சிவத்தை

அருளும் 
தவத்தை
புரிவதற்கு
புறிவதற்கு 
புவிமீது 
அமர்ந்தேன்




ஹரியும் 
அறி - யாதவனாய்
அயனும் 
முயலாதவனாய் 
தவிக்கும்
தன்னுள்ளே
தகிக்கும்
தணலாய் 
தவமிருக்கும்
மலையே
அவன் என்று
அண்ணாந்து 
ஆர்பரித்தானோ
ஆயற்பாடியின்
கறுத்த சிறுவன் 

கோயர் பாடும்
மதத் தவறும்
ஈசனே நபியென்று 
நம்புவார்
பிறை மட்டுமே
தொழுவார்
பிறரை
 தொழார்
பிறை சூடனையும்
தொழ 
இன்று இராத்திரி
விழி திறக்க வேண்டும்

சவமாகும்
இவ்வுடலை
நடமாடும் வரை
நட மாடும் அவரை
இயக்கும் சக்தியே
சிவமாகும் 

என்றும் உறங்குபவனே
மாதவன் என்றால்
என்றும் 
உறங்காதவனே
மா தவம் புரிகின்றான் 
பனி மலையில் 
மரமாய் நின்றாலும்
அதில் அசையும்
இலையாய்
இசையாய்
ஆடும் அவன்
நின்ற( து) தில்லை

களக்காட்டு கவிராயர்
26 பிப்ரவரி 2025

Comments

Post a Comment

Popular posts from this blog

GU RU Purnima - Dispelling Darkness to Light

A Pedestrian Paramacharya

Sindoor - door of sins பார் அதி புதுமை பெண்