மறை பொருள் விலக்கிய விளக்கே Veil removing Light


மறை பொருள்
ஒன்று
திரையின் பின்னே
விளங்காமல்
மறைந்திருந்தது 

மறைவான 
அப்பொருளை
மறைத்த
திரை விலக்கி
விளக்க வந்த
திரு விளக்கே

உணர்ச்சியால்
உணர முடியாத
உன்னதத்தை
உணர்வால் 
உணவால்
உணர வைத்த
உள்ளொளியே 

வாடிய பயிரையும் 
வாடாமல் காக்க
வாரி வாரி
வழங்கிய 
வள்ளலே

நீ விரித்த கடையில்
நான் வாங்கிய அக(ல்) விளக்கு
அகன்றது என் முன் திரை
அகண்டது என் விழித்திரை
மறந்தது நித்திரை
மரணமில்லா பெருவாழ்வை
வந்தவர்கெல்லாம் வாரி
வழங்கிய வள்ளல் பெருமானே

நான் யார் ? என்று
வினவிய அவர் அம்மலை 
வலம் வர சொன்னார்
அம்மணம் மிகு மலையை
வலம் வந்து இடம் நின்ற
உண்ணா முலையை
அடி ஒற்றி முடி காண
அருட் பிரகாசமாய்
அது பரவியது
அண்ணாந்து
அவ்வொளியைப் 
அண்ணாக்கு ஓட்ட 
அகத்தின் உள்ள
அடக்க பார்த்தேன்
அது கடை விரித்தது 
அதனை கொள்வாரில்லை 
அடக்கமில்லா அஜ்ஜோதி
மரணமில்லா பெருவாழ்வு
அளிக்க தனிப் பெருங்கருணையால்
பிறவிக் கடலை 
நீந்தும் கலையை
கற்பிக்க
கருவறை
வெளி வந்ததம்மா
அவ்வெளிச்சம்


  

Comments

  1. Amazing poem. It reflects your travel in the spiritual path. Beautiful.

    ReplyDelete
  2. Well written Kumar , Great insights

    ReplyDelete
  3. விளக்கிற்கே விளக்கம்,
    அற்புதம் !

    ReplyDelete
    Replies
    1. இது அந்த விளக்கின் விளக்கம். நம்மை ஒரு கருவியாக பயன்படுத்தி கொண்டது விளக்கு

      Delete

Post a Comment

Popular posts from this blog

GU RU Purnima - Dispelling Darkness to Light

A Pedestrian Paramacharya

Sindoor - door of sins பார் அதி புதுமை பெண்