மிக்ஜாம் புயலில் பாரதியார் Bharathi in Michaung Floods
ஏரிகளை கொள்ளை
கொண்டு
சேரிகளில் கும்பலாக
சேர்ந்து
அடாது சேர்த்த
செல்வங்கள் அனைத்தும்
விடாது பெய்த மழையில்
அடையாற்றின் அடை
வெள்ளத்தில்
அடித்து போகும்
மெல்ல சென்னை
கடல் சுழப் போகும்
என்று பாரதி பாட வேண்டி வரும்
என்றுணர்ந்து
அல்லிகேணியில்
அந்த ஆனை
அந்த ஆணை
தள்ளிவிட்டதோ
மிக்ஜாமும்
மிச்சம் இல்லாமல்
முற்றம் வரும் என்று
நாற்றம் மிகு
நகரத்தில்
நான் வாழமாட்டேன்
என்று
எட்டா புறத்திற்கு
சென்று விட்டானோ
மகாகவி
11.12.2023
வேள்சசேரியில் சிக்கிக் கொண்ட
களக்காட்டு கவிராயர்
கிருஷ்ணகுமார் சத்தியவாகீஸ்வரன்

Super
ReplyDeleteநன்றி சகோதரி
Deleteஅழகாய் வடிவமைத்தது பாரதியார் நினைவுகள் என்றும் வெள்ளமாய் மனதுள் வெல்லமாய் தித்திக்கும்
ReplyDeleteநன்றி கவிஞரே
Delete